17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

வயிறு

Page 1 of 9812345...102030...Last »
கிராம்பு, வெற்றிலை, மிளகு ஆகியவற்றை மென்று சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் வயிற்று உப்புசம் குறையும்.

அறிகுறிகள்:
  • வயிறு உப்பிசமாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கிராம்பு, வெற்றிலை, மிளகு ஆகியவற்றை மென்று சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் வயிற்று உப்புசம் குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.4/5 (37 votes cast)

வேப்பிலை, இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று கிருமிகள் குறையும்.

அறிகுறிகள்:

  • வயிற்று கிருமிகள்.

தேவையான பொருள்கள்:

  1. வேப்பிலை.
  2. இஞ்சி.
  3. உப்பு.
  4. தேன்.

செய்முறை:
வேப்பிலையை நன்கு சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து தேவையான அளவு இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய பிறகு சிறிது நேரம் வைத்திருந்து மேலே இருக்கும் தெளிந்த சாறை எடுத்து சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று கிருமிகள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (24 votes cast)

கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் குறையும்.

அறிகுறிகள்:

  • வயிற்றுப் பொருமல்.

தேவையான பொருட்கள்:

  1. கிர்ணிப்பழம் (முலாம் பழம்)
  2. உப்பு.
  3. இஞ்சிச்சாறு.
  4. சீரகம்.

செய்முறை:

கிர்ணிப்பழத்தை (முலாம் பழம்) எடுத்து தோல் நீக்கி அதனுள் இருக்கும் விழுதை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (7 votes cast)

நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சதக்குப்பை விதை மற்றும் வசம்பு ஆகியவற்றை இடித்து பொடி செய்து தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். உடல் வலிமை பெறும்.

அறிகுறிகள்:

  • அஜீரண கோளாறு.
  • வயிற்று கோளாறுகள்.
  • பலவீனம்.
  • சோர்வு.

தேவையான பொருள்கள்:

  1. நிலவேம்பு.
  2. கோரைக்கிழங்கு.
  3. சதக்குப்பை விதை.
  4. வசம்பு.

செய்முறை:

  • நிலவேம்பை முழுச்செடியாக எடுத்து காய வைத்து 20 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
  • கோரைக்கிழங்கை இடித்து பொடி செய்து 20 கிராம் அளவு எடுத்து வைத்து கொள்ளவும்.
  • சதகுப்பை விதைகளை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளாவும்.
  • வசம்பை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளவும்.

இடித்து பொடி செய்த அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக கலந்து 200 மி.லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 50 மி.லி ஆக சுண்டியதும் எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வடிகட்டி காலை, இரவு குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். உடல் வலிமை பெறும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (15 votes cast)

கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி ஆகியவற்றை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.

அறிகுறிகள்:

  • அஜீரணம்.
  • வயிறு உப்பீசமாக காணப்படுதல்.
  • பசியின்மை.

தேவையான பொருட்கள்:

  1. கருஞ்சீரகப்பொடி.
  2. மல்லிப்பொடி.
  3. பால்.

செய்முறை:
கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.6/5 (10 votes cast)

மாதுளம் பழத்தோலை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து அரை கப் எருமைத் தயிரில் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.


அறிகுறிகள்:

  • அடிக்க‌டி வ‌யிற்று போக்கு.
  • வ‌யிற்று வ‌லி.
  • மலத்தில் இரத்தம் கலந்து காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

  1. மாதுளம் பழத்தோல்.
  2. எருமைத் தயிர்.

செய்முறை:
மாதுளம் பழத்தோலை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து அரை கப் எருமைத் தயிரில் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.4/5 (10 votes cast)

Page 1 of 9812345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers