17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

நோயின்றி வாழ

Page 1 of 912345...Last »

சம அளவு சுக்கு, திப்பிலி, கிராம்பு, சிறுசொறி வேர், அக்கரா வேர், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடை இலை, கற்பூரவல்லி இலை, கோஷ்டம், சீந்தில், சிறுதேக்கு, நிலவேம்பு, கோரைக்கிழங்கு மற்றும் வட்ட திருப்பி ஆகியவற்றை உலர்த்தி காய வைத்து இடித்து பொடித்து கசாயமாக செய்து குடித்து வந்தால் சளிக்காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் குறையும்.

அறிகுறிகள்:

  • சளி.
  • உடல் வலி.
  • காய்ச்சல்.

தேவையான பொருள்கள்:

  1. சுக்கு.
  2. திப்பிலி.
  3. கிராம்பு.
  4. சிறுகாஞ்சொறி வேர்
  5. அக்கரா வேர்.
  6. முள்ளி வேர்.
  7. கடுக்காய் தோல்.
  8. ஆடாதோடை இலை.
  9. கற்பூரவல்லி இலை.
  10. கோஷ்டம்
  11. சீந்தில்.
  12. சிறுதேக்கு.
  13. நிலவேம்பு.
  14. கோரைக்கிழங்கு.
  15. வட்ட திருப்பி.

செய்முறை:
சம அளவு சுக்கு, திப்பிலி, கிராம்பு, சிறுசொறி வேர், அக்கரா வேர், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடை இலை, கற்பூரவல்லி இலை, கோஷ்டம், சீந்தில், சிறுதேக்கு, நிலவேம்பு, கோரைக்கிழங்கு மற்றும் வட்ட திருப்பி ஆகியவற்றை உலர்த்தி காய வைத்த மூலிகையாக எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

  • இந்த மூலிகையை காய்ச்சலின் போது 5 கிராம் அளவு எடுத்து 200 மி.லி நீர் விட்டு 50 மி.லி ஆக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி காலை, மாலை குடித்து வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • ச‌ளி சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும். அதிக சளியினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் அனைத்து விதமான வைரஸ் காய்ச்சலுக்கும் இந்த மூலிகை மிகச்சிறந்த மருந்தாகும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (3 votes cast)

நிலவேம்பு போன்ற குறிப்பிட்ட மூலிகைகளை இடித்து பொடி செய்த மூலிகையே நிலவேம்பு கசாயம்.

தேவையான பொருள்கள்:

  1. நிலவேம்பு.
  2. வெட்டிவேர்.
  3. விளாமிச்சம் வேர்.
  4. சந்தனம்.
  5. பேய்புடல்
  6. பற்படாகம்.
  7. கோரைக்கிழங்கு.
  8. சுக்கு.
  9. மிளகு.

செய்முறை:

சம அளவு நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சம் வேர், சந்தனம், பேய்புடல், பற்படாகம், கோரைக்கிழங்கு, சுக்கு மற்றும் மிளகு ஆகியவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து பயன்படுத்த வேண்டும். இந்த மூலிகையே நிலவேம்பு கசாயம்.

உபயோகிக்கும் முறை:

  • நிலவேம்பு கசாயத்தை 5 கிராம் அளவு எடுத்து 200 மி.லி நீர் விட்டு 50 மி.லி ஆக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி காலை, மாலை குடித்து வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • இந்த கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு மிக சிறந்த மருந்தாகும். சளி சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும். மேலும் வயிற்று கோளாறுகள் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்கள் இந்த கசாயத்தை குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (5 votes cast)

தேவையான பொருட்கள்:

  1. மைதா – 2 கப்
  2. வெண்ணெய் – 1/4 கப்
  3. உருளைக்கிழங்கு- 2
  4. கேரட் – 1
  5. பீன்ஸ் – 10
  6. முட்டைக்கோஸ் – சிறியது
  7. காலிஃபிளவர் – சிறியது
  8. பட்டாணி – 1/2 கப்
  9. பொடித்த பச்சை மிளகாய் – 2
  10. வெள்ளைப் பூண்டு – 2 பல்
  11. பொடியாக நறுக்கிய இஞ்சி -சிறிதளவு
  12. பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
  13. வெங்காயத்தாள் – சிறிதளவு
  14. சில்லி சாஸ் – சிறிதளவு
  15. சோயா பீன்ஸ் சாஸ் – சிறிதளவு
  16. உப்பு - தேவையான அளவு
  17. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • மைதா மாவு, வெண்ணெய் கலந்து அதனுடன் சிறிதளவு சூடான தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு உருளைக் கிழங்கு, கேரட், முட்டைக் கோஸ், காலிஃபிளவர், பட்டாணி ஆகியவற்றை தண்ணீர் விடாமல் ஆவியில் வேகவைத்துக் கொள்ளவேண்டும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், வெள்ளைப் பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளித்து, பிறகு காய்கறிக் கலவையை சேர்த்து, அதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவேண்டும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிதாக எடுத்து  வட்ட வடிவில் உருட்டி அதன் நடுவில் ஒரு ஸ்பூன் காய்கறி கலவையை வைத்து மடித்து தண்ணீரை தொட்டு ஓரங்களை ஒட்டி  இட்லித் தட்டில் வைத்து வேக வைக்கவேண்டும். வெந்தவுடன் இறக்கி சூடாக பரிமாற வேண்டும்.

மருத்துவக் குணங்கள்:

  1. உருளைக் கிழங்கில் அதிக அளவில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறு உள்ளது. இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழித்து நெஞ்செரிச்சலை குறைய காரணமாகிறது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.
  2. கேரட்டில்  விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் உள்ளது.  கண் பார்வைக்கு நல்லது. உடல் பருமன் ஆகாமல் காக்கும்.
  3. பீன்ஸில் புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள் ஆகிய சத்துக்கள் உள்ளது. பித்தத்தை தணிக்கும், பார்வையை தெளிவாக்கும்,  சருமப் பளபளப்பாகவும்,  வாயுவை குறையச் செய்யும்.
  4. முட்டைக் கோஸில் சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ ஆகிய சத்துக்கள் உள்ளது. ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். மலச்சிக்கலை போக்கும்.  தாது பலப்படும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.3/5 (4 votes cast)

தேவையான பொருட்கள்:

  1. கோரோசனை – 30 கிராம்
  2. சுக்கு – 15 கிராம்
  3. மிளகு – 15 கிராம்
  4. திப்பிலி- 15 கிராம்
  5. கடுக்காய்- 15 கிராம்
  6. தான்றிக்காய்- 15 கிராம்
  7. நெல்லிவற்றல்- 15 கிராம்
  8. ஏலம்- 15 கிராம்
  9. கிராம்பு- 15 கிராம்
  10. அதிமதுரம் – 15 கிராம்
  11. அக்ரகாரம் – 10 கிராம்
  12. கோஷ்டம் – 10 கிராம்
  13. சாதிபத்திரி – 10 கிராம்
  14. நன்னாரிவேர் – 15 கிராம்
  15. சிறுகீரை வேர் – 15 கிராம்
  16. பொன்னாங்காணி வேர் – 15 கிராம்
  17. மணத்தக்காளிச் சாறு

செய்முறை:

  • எல்லா பொருட்களையும் மணத்தக்காளிச் சாறு விட்டு நன்றாக அரைத்து இலந்தைக் கொட்டையளவு பெரிய மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உபயோகிக்கும் முறை:

  • குழந்தைகளுக்கு ஒரு மாத்திரைச் சாப்பிட கொடுக்க வேண்டும். தாய்மார்கள் இரண்டு மாத்திரைகள் சாப்பிட  வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • காய்ச்சல், வயிற்றுப் போக்கு, ஆயாசம், உடல் வலி ஆகிய நோய்கள் குறையும்.

அனுபானம்:

  • இஞ்சிச்சாறு, தாய்ப்பால், தேன் ஆகியவைகள் சாப்பிட வேண்டும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.0/5 (2 votes cast)

  1. பசித்த பின் சாப்பிட வேண்டும்.
  2. ஜீரணமாகாத வேளையில் அதிகம் சாப்பிட கூடாது.
  3. பகலில் தூங்கக் கூடாது.
  4. அதிகாலையில் துயில் எழ வேண்டும்.
  5. அழுக்கு ஆடைகளை அணியக் கூடாது.
  6. காற்றோட்டம் இல்லாத இடத்தில் வசிக்கக் கூடாது.
  7. அதிக நேரம் கண் விழித்து இருக்க கூடாது.
  8. எப்போதும் ஏதாவது ஒன்றைப்பற்றி அளவு கடந்த சிந்திக்கக் கூடாது. இவற்றின் காரணமாக பல நோய்கள் தோன்றக் கூடும்.
  9. படுக்கையை விட்டு எழுந்ததும் சிறிது இஞ்சியை சாப்பிட வேண்டும்.
  10. மதிய உணவு முடிந்ததும் சிறிது சுக்கு சாப்பிட வேண்டும்.
  11. இரவில் படுக்கச் செல்லும் முன்பு கடுக்காய் சாப்பிட வேண்டும்.
  12. அதிகாலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும். ஓடுதல், நீந்துதல் ஆகியவையும் நல்ல உடற்பயிற்சியே.

இவற்றை ஒழுங்காக கடைபிடித்து வந்தால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (17 votes cast)

முளை தானியங்கள் அற்புத, அதிசய உணவுகள் அதிக அளவில் தெம்பும், ஆரோக்கியமும், ஆற்றல், உடல் சக்தி, உழைப்பு சக்தி தரும் ஒப்பற்ற உணவுகள். நமது உணவின் ஒரு அங்கமாக, சமைக்காமல் சேர வேண்டும். எல்லா இடங்களிலும் இப்போது முளைக்க வைத்தும் கிடைக்கிறது. பச்சைபயறு, வேர்க்கடலை, கோதுமை, கேழ்வரகு, கம்பு, மூக்குக்கடலை, உளுந்து போன்றவைகளில் இருந்து முளை தானியங்கள் தயாரிக்கலாம்.

முளை தானியங்கள் தயாரிக்கும் முறை:

  • 50 கிராம் தானியங்கள் முளைத்த பின் 300 கிராம் முதல் 400 கிராம் வரை பெருகிவிடும். 8 முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின் ஈரப் பருத்தி துணியில் அத்தானியங்களைக் கட்டி 8 முதல் 12 மணி நேரம் வரை காற்றில் விட்டால் நல்ல முளை கிளம்பி வரும். ஒரு மணி நேர இடை வெளியில் சிறிது தண்ணீர் தெளிக்கலாம். இப்பொழுது முளை தானியங்கள் தயார். இந்த முளை தானியங்களை காலை உணவாக சாப்பிடலாம்.

முளை தானியங்கள் சாறு தயாரிக்கும் முறை:

  • ஏதேனும் ஒரு தானியத்தை முளைக்க விட்டு முளைத்த தானியம் 150 கிராம் அளவில் எடுத்து கழுவி சமைக்காமல் பச்சையாக அரைத்து அத்துடன் 150 மி.லிட்டர் தண்ணீர் சோ்த்து வடிகட்டவேண்டும். சுவைக்காக தேன், தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம்.

முளை தானியங்களில் காணப்படும் சத்துக்கள்:

  • வியப்பூட்டும் வகையில் தானியங்கள் முளைக்கும் போது சத்துக்கள் பல மடங்குகள் பெருகி மனிதர்களுக்கு பல நன்மைகளை தருகிறது.
  • புரதம், விட்டமின்கள், தாது உப்புகள், காரத்தன்மை மிகுந்து, அமிலத்தன்மை குறைந்து நல்ல பலன் தருகின்றது. மேலும் தேவையற்ற மாவுச்சக்தி, வெப்பசக்தி ஆகியவற்றை குறைய செய்கிறது. புரதம், உயிர்ச்சத்துக்கள் அதே அளவு கூடுவதால் நமது இளமை மீட்கப்படுகிறது. உடல் எடையிலும் எட்டு மடங்கு பெருக்கமடைவதால் குறைந்த அளவில் நிறைந்த பலன்களைப் பெறுகிறோம்.
  • கலோரி வெப்பசக்தி 15 விழுக்காடும்
  • மாவுச்சத்து 9 விழுக்காடு குறைந்தும்

அதற்கும் மேலாக கூடும் சத்துக்கள் கீழே தரப்படுகின்றன.

  • புரதம் 30% கூடுகிறது
  • கால்சியம் 35% கூடுகிறது
  • சோடியம் 700% பல்கிப் பெருகிறது
  • இரும்புத்தாது 40% வளர்கிறது
  • பொட்டசியம் 80% வளர்கிறது
  • பாஸ்பரஸ் 55% உயர்கிறது

அதே போல் உயிர்ச்சத்துக்களும் கூடுகின்றன.

  • விட்டமின்எ – 280%
  • விட்டமின் B1 – 210%
  • விட்டமின் B2 – 510%
  • நியாசின் – 255%
  • அஸ்கார்பிக் அமிலம் விட்டமின் C – 500 விழுக்காடுக்கு மேலும் பெருகி அற்புத ஆற்றலை தருகின்றன.
  • அமினோ அமிலங்களும் கூடுகின்றன. இதில் பெருகியப் புரோட்டினும், சத்துக்களும் எளிதாக ஜீரண மயமாகும் நிலையில் உள்ளதால் மனிதர்களின் மலிவான உணவுகள் எனலாம். முளைத்த தானியங்கள் வாயுத் தொல்லைகள் தருவதில்லை.

மருத்துவக் குணங்கள்:

  1. குளிர்ச்சி மிகுந்தது. வெயில் காலங்களில் நன்றாகப் பயன்படுத்தலாம்.
  2. உடல் சூடு, மலக்கட்டு, மூலப்பிணிகள் குறையும்.
  3. பசியை நீக்கும் ஆற்றல் மிகுந்த உணவாகும்.
  4. முளைத்த பச்சைப் பயறு ஒருவாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், வயிற்றுப்புண் ஆகியவைகள் குறையும்.
  5. உடல் தொப்பை, பருமன், நீரழிவு நோய், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.
  6. உடலின் ஆற்றல், பிராண சக்தி ஆகியவற்றை பெருக்கிவிடும்.
  7. உடலிலுள்ள அனைத்துப் பகுதிகளும் புத்துணர்வும், புதிய சக்தியும் கிடைக்கும்.
  8. நோஞ்சான் குழந்தைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.
  9. வேலைப் பளு மிகுந்தவர்களுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (7 votes cast)

Page 1 of 912345...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers