17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

நோயற்ற வாழ்விற்கு

Page 1 of 1912345...10...Last »

மணலிக்கீரை:

  • மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

மலச்சிக்கல் குணமாக:

  • மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

ஞாபக சக்தி பெருக:

  • ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.

குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:

  • மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.

மூளை நரம்புகள் பலம்பெற:

  • மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.

ஈரல் பலம்பெற:

  • மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.4/5 (252 votes cast)

மருத்துவக்குணங்கள்

நீர் பிரம்மி:

  • நீர் பிரம்மி செடியில் ஆல்கலாய்டுகளும், குளுக்கோசைடுகளும் உள்ளன.  இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

நினைவாற்றலைத் தூண்ட:

  • நீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

  • நீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி கஷாயம் தயார் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி மற்றும்  மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.  மேலும் சிறுநீர் பெருக்கம் ஏற்படும்.

தொண்டை கரகரப்பு குணமாக:

  • நீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

கோழைக்கட்டு குணமாக:

  • நாீர் பிரம்மி வேரை அரைத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து நெஞ்சில் தடவினால் கோழைக்கட்டு நீங்கும்.

வீக்கங்கள்  கரைய:

  • நீர் பிரம்மி இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களின் மீது  ஒற்றடமிட்டுஅதன்மீது வைத்துக் கட்டினால் வீக்கங்கள் கரையும்.

இத்தகைய மருத்துவக்குணங்களைக்கொண்ட நீர் பிரம்மி செடியை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்;  வாழ்வில் வளம் பெறுவோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (114 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. நிலவேம்பு = 25 கிராம்
  2. ஏலக்காய் = 5
  3. கிராம்பு = 5

செய்முறை:

  • ஏலக்காய் மற்றும் கிராம்பை பொடி செய்து வைத்து கொள்ளவும். நிலவேம்பு இலை மற்றும் பூவை எடுத்து அதனுடன் பொடி செய்து வைத்த ஏலக்காய் மற்றும் கிராம்பை சேர்த்து 500 மி.லி  தண்ணீர் கலந்து நன்றாக காய்ச்சி ஆற வைத்து குடித்து வர வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

  • 5 மி.லி அளவு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேளையும் குடித்து வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • வைரஸ் காய்ச்சல், சாதாரண காய்ச்சல், குளிர் காய்ச்சல், அஜீரணம், வாய்வு கோளாறுகள் ஆகியவை குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (91 votes cast)

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  • பூசணிக்காய் சாறு 120 மிலி எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
  • சிறுநீரக செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி பருகி வந்தால் சிறுநீரக செயல்பாடு சீராக அமையும்.

“வருமுன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழியை உணர்ந்து பூசணிக்காயின் மருத்துவக்குணங்களை முன்னதாகவே அறிந்துகொண்டு சிறுநீரகம் சம்பந்தமான நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு வாழ்வில் வளமுடன் வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (14 votes cast)

கீரை வகைகள்:

  • பண்ணைக்கீரை
  • பாற்சொறிக்கீரை
  • வள்ளைக்கீரை
  • சேம்புக்கீரை

பண்ணைக்கீரை:

  • பண்ணைக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.  மேலும் தோல்சம்பந்தமான நோய்கள்  மற்றும் உடல் சூடுஆகியவற்றை குணப்படுத்த வல்லது.

பாற்சொறிக்கீரை:

  • பாற்சொறிக்கீரையுடன் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி, குடல்புண் ஆகியவை குணமாகும்.

வள்ளைக்கீரை:

  • கொடிவகையைச் சார்ந்த இந்தக்கீரையானது பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
  • வள்ளைக்கீரையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மகப்பேறு தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.
  • உடலில் புதிய இரத்தத்தை உருவாக்கும். உடல் பலம் பெறும்.
  • நீரழிவு நோயால் துன்பப்படுபவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் நீரழிவு நோய் குணமாகும்.

சேம்புக்கீரை:

  • சேம்பங்கிழங்கின் இலையான இந்தக்கீரையை சமைத்து உண்டால் அதாவது கூட்டு, பொரியல், துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான மூல வியாதிகளும் குணமாகும்.

இத்த‌கைய நன்மைகள் நிறைந்த இந்த கீரை வகைகளை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக உண்போம். “நோயற்ற வா‌ழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ‌ஏற்ப நோயின்றி வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.6/5 (7 votes cast)

இரத்த ஓட்டம் சீராக அமைவதற்கு:

  • இலுப்பைப்பூக்கள் மனிதருக்கும், கால்நடைகளுக்கும் இரத்த விருத்தி மருந்தாக பயன்படுகிறது.
  • இலுப்பை பூக்களை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் இருமல், காய்ச்சல் மற்றும் நீர் வேட்கை ஆகியவை குணமாகும்.

ஆஸ்துமாநோய் குணமாக:

  • மூச்சு தினறல் ஏற்படும் நேரத்தில் இலுப்பைப் பூவை பால்விட்டு அரைத்து பாலில் கலந்து குடித்தால் மூச்சுத்தினறல் குணமாகும்.

கால் வீக்கம் குறைய:

  • இலுப்பை மரத்தின் காய்ந்த பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடமிட்டால் அந்த இடத்தில் வியர்வை தோன்றி வீக்கம் குறையும்.
  • ஆனால் வயதானவர்களுக்கு கால்களில் அரிப்பும், புண்ணும் தோன்றும்.
  • எனவே வயது முதிர்ந்தவர்கள் இலுப்பைப்பூ கசாயத்தை அவ்விடங்களில் தடவினால் அரிப்பு மற்றும் புண்கள் நீங்கும்.

“உணவே மருந்து மருந்தே உணவு” என்ற பழமொழியை உணர்ந்து அன்றாடம் உண்ணும் உணவுகளில் இதனை சேர்த்து உண்போம்; நோயின்றி வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (6 votes cast)

Page 1 of 1912345...10...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers