17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

பித்தம்

Page 1 of 2112345...1020...Last »

நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

அறிகுறிகள்:

  • மஞ்சள் நிறத்தில் வாந்தி.
  • தலைச்சுற்றல்.

தேவையான பொருட்கள்:

  1. கொய்யாப்பழம்.
  2. மிளகு.
  3. எலுமிச்சைப் பழச்சாறு.

செய்முறை:
நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு, எலுமிச்சைப்பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (46 votes cast)

செங்கரும்புச் சாறு, எலுமிச்சை பழச்சாறு, சீரகப் பொடி ஆகியவற்றை கலந்து  தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

அறிகுறிகள்:

  • பித்தம்.
  • வாந்தி.
  • தலைச்சுற்றல்.

தேவையான பொருட்கள்:

  1. செங்கரும்புச் சாறு.
  2. எலுமிச்சைப் பழச்சாறு.
  3. சீரகப் பொடி.

செய்முறை:
செங்கரும்புச் சாறு 100 மி.லி, எலுமிச்சைப் பழச்சாறு 30 மி.லி ஆகியவற்றுடன் சீரகப் பொடியை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (13 votes cast)

பச்சை வேப்பம் பூ, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அதனுடன் தேங்காய், தேவையான அளவு புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து துவையல் செய்து சாதத்துடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

அறிகுறிகள்:

  • பித்தம்.
  • தலைச்சுற்றல்.
  • வாந்தி.

தேவையான பொருட்கள்:

  1. பச்சை வேப்பம் பூ.
  2. உளுத்தம் பருப்பு.
  3. மிளகாய் வற்றல்.
  4. பெருங்காயம்.
  5. எண்ணெய்.
  6. புளி.
  7. உப்பு.

செய்முறை:
ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 மிளகாய் வற்றல், மூன்று துளி பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அதனுடன் தேங்காய் தேவையான அளவு புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து துவையல் செய்து சாதத்துடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (10 votes cast)

மஞ்சள் நிறமாக வயிற்றுப்போக்கு, நாக்கு, கடைவாய் ஆகிய பகுதிகளில் புண்கள், உடல் முழுவதும் நெருப்பு சுட்டதுப் போல எரிச்சல், மயக்கம் ஏற்படுதல், உடல் சோர்வாக காணப்படுதல் ஆகியவைகள் பித்தக் கணை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.


தேவையான பொருட்கள்:

  1. உசிலம் பட்டை
  2. வசம்பு.
  3. துளசி வேர்.
  4. வில்வ வேர்.
  5. வெங்காயம்.

செய்முறை:

  • உசிலம் பட்டை, வசம்பு, துளசி வேர், வில்வ வேர், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி கஷாயத்தை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

  • காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வரவேண்டும்.

தீரும் நோய்கள்:

  • பித்தக் கணை நோய் குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.6/5 (5 votes cast)

நிலவேம்பு, பற்பாடகம், கடுகுரோகிணி, சிறுகாஞ்சொறி, கோரைக் கிழங்கு ஆகியவற்றை சேர்த்து இடித்து அதனுடன் அரை லிட்டர்  தண்ணீர் விட்டு காய்ச்சி மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.

அறிகுறிகள்:

  • பித்தம் அதிகமாக காணப்படுதல்.
  • காய்ச்சல்.
  • வாந்தி மஞ்சளாக காணப்படுதல்.
  • தலை சுற்றுதல்.
  • சோர்வாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

  1. நிலவேம்பு.
  2. பற்பாடகம்.
  3. கடுகுரோகிணி
  4. சிறுகாஞ்சொறி
  5. கோரைக் கிழங்கு.

செய்முறை:
நிலவேம்பு, பற்பாடகம், கடுகுரோகிணி, சிறுகாஞ்சொறி, கோரைக் கிழங்கு ஆகியவற்றை சேர்த்து இடித்து அதனுடன் அரை லிட்டர்  தண்ணீர் விட்டு காய்ச்சி மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (4 votes cast)

திராட்சைப் பழம், பற்பாடகம், கடுகுரோகிணி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், கொன்றைப் பட்டை ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டாக் காய்ச்சிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி மூன்று வேளை சாப்பிடக் கொடுத்து வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.

அறிகுறிகள்:

  • பித்தம் அதிகமாவதால் ஏற்படும் காய்ச்சல்.
  • வாந்தி மஞ்சள் நிறமாக காணப்படுதல்.
  • தலைச்சுற்றல்.
  • வயிற்றுப்போக்கு.

தேவையான பொருட்கள்:

  1. திராட்சைப் பழம்.
  2. பற்பாடகம்.
  3. கடுகுரோகிணி
  4. கோரைக் கிழங்கு.
  5. கடுக்காய் தோல்
  6. கொன்றைப் பட்டை.

செய்முறை:
திராட்சைப் பழம், பற்பாடகம், கடுகுரோகிணி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், கொன்றைப் பட்டை ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டாக் காய்ச்சிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி மூன்று வேளை சாப்பிடக் கொடுத்து வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.4/5 (5 votes cast)

Page 1 of 2112345...1020...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers