17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

தோசை

Page 1 of 11

தேவையான பொருள்கள்:

  1. வெற்றிலை = 6
  2. மிளகுத்தூள் = 2 ஸ்பூன்
  3. தோசை மாவு = 5 கப்
  4. எண்ணெய் = சிறிதளவு
  5. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • வெற்றிலைகளை நன்கு சுத்தம் செய்து காம்புகளை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கையால் நன்றாக பிசைந்து தோசை மாவுடன் சேர்த்து போட்டு நன்கு கலந்து தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தோசை மாவை ஊற்றி பிறகு தோசையை சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
  • இந்த தோசையை நன்கு கனமாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

சூடான வெற்றிலை மிளகு தோசை தயார். இதை அனைத்து விதமான சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான தோசை.

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

  • புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து, மற்றும் கலோரிகள் காணப்படுகிறது. மேலும் கால்சியம், கரோடின், நியாசின் மற்றும் வைட்டமின் “சி”, அமினோ அமிலங்கள், டையாஸ்டேஸ் ஆகியவை உள்ளது.
  • இது ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது. வாய்வு தொல்லைகளை குறைக்கும். விஷக்கடிக்கு உதவுகிறது.
  • சிறுநீர் பிரச்சனை, அதிக இரத்தப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். கண் வலி, வயிற்று வலி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் நரம்பு தளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.

இவ்வாறு உடலுக்கு சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.6/5 (11 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. ஓட்ஸ் = 3 கப்
  2. தயிர் = 2 ஸ்பூன்
  3. சீரகம் = 1 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் = 3
  5. அரிசி மாவு = 2 ஸ்பூன்
  6. சோள மாவு = 2 ஸ்பூன‌
  7. வெங்காயம் = 1
  8. உப்பு = தேவையான அளவு
  9. கறிவேப்பிலை = சிறிதளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை போட்டு சிறிது வெந்நீர் ஊற்றி தயிரை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பிறகு பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து இதில் அரிசி மாவு மற்றும் சோள மாவை கலந்து வைத்து கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலக்கி மெல்லியதாக தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார். இதை அனைத்து விதமான சட்னியுடனோ, வெறும் தோசையாகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • ஓட்ஸில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் உள்ளது. குறைந்த அளவே கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது.
  • இதனால் இதயம், நகம் மற்றும் எலும்புகலுக்கு நகங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
  • உடலில் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலை குறைக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலைப்படுத்துகிறது. நரம்பு கோளாறுகள் குறைக்கிறது. ஓட்ஸ் சாப்பிடுவதால் கருப்பை கோளாறுகள் குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (4 votes cast)

தேவையானப்பொருட்கள்:

  1. தோசை மாவு – இரண்டு கரண்டி
  2. பெரிய வெங்காயம் – ஒன்று
  3. தக்காளி – ஒன்று
  4. கேரட் – ஒன்று
  5. பீன்ஸ் – பத்து
  6. குடைமிளகாய் – பாதி
  7. கருவேப்பிலை -ஒரு தேக்கரண்டி
  8. கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி
  9. நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

  1. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.கேரட்டை துருவி வைக்கவும்,பீன்ஸ், குடைமிளகாயை நறுக்கவும்.
  2. வாணலியில் நெய் விட்டு எல்லா காயையும் பொன்னிறமாக வதக்கவும்.
  3. தோசை கல்லில் தோசை மாவை விட்டு இந்த வந்தக்கிய காய்களை சேர்த்து மேலே நெய் விடவும்,கருவேப்பில்லை கொத்தமல்லி பொடியாக நறுக்கி தோசை மேலே தூவவும்.
  4. தோசை ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு சிம்மில் வைத்து மறுபுறம் வேக வைக்கவும்.
  5. கார சட்னி உடன் சாப்பிட சூடான வெஜ் தோசை ரெடி.
VN:F [1.9.22_1171]
Rating: 4.8/5 (4 votes cast)

தேவையானப்பொருட்கள்:

  1. கோதுமை மாவு – 1 கப்
  2. கடலை மாவு – 1 கப்
  3. பொடியாக நறுக்கிய பாலக் கீரை – 1 கட்டு
  4. வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  5. பச்சை மிளகாய் – 4-5 (பொடியாக நறுக்கியது)
  6. கருவேப்பிலை – 5 இலை
  7. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  1. எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
  2. பத்து நிமிடம் கழித்து தோசையாக வார்க்கவும்.
  3. வெறும் வெண்ணையுடன் சாப்பிடலாம்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.8/5 (4 votes cast)

தேவையான பொருட்கள்:

  1. புழுங்கல் அரிசி -2 கப்
  2. முடக்கத்தான் கீரை - இரண்டு கைப்பிடி அளவு
  3. உப்பு –தேவையான அளவு

செய்முறை:

  1. 2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.
  2. இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாத‌ர‌ண‌த் தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால், க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது.
  3. நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (10 votes cast)

Page 1 of 11

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers