17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

குழம்பு

Page 1 of 1012345...10...Last »

தேவையான பொருள்கள்:

  1. மசால் வடை – 10
  2. வெங்காயம் – 75கிராம்
  3. பச்சை மிளகாய் – 2
  4. மல்லிப் பொடி -இரண்டு தேக்கரண்டி
  5. மிளகாய் பொடி – ஒன்றரைத் தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி – சிறிதளவு
  7. தேங்காய் துருவியது – 5 தேக்கரண்டி
  8. சோம்பு – அரைத் தேக்கரண்டி
  9. முந்திரி -5
  10.  இஞ்சி – சிறுதுண்டு
  11. சமையல் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
  12. கிராம்பு- 2
  13. மிளகு – கால் தேக்கரண்டி
  14. கறிவேப்பிலை – ஒரு தேக்கரண்டி
  15. மல்லி – ஒரு தேக்கரண்டி
  16. உப்பு – தேவையான அளவு

வடை செய்ய:

  • அரை கிலோ ஆழாக்குக் கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • நன்கு ஊறிய பிறகு நீரை சுத்தமாக வடிகட்ட வேண்டும்.
  • அதில் ஒரு தேக்கரண்டிப் பருப்பை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மீதி உள்ள கடலைப் பருப்பை உப்பு போட்டு பரபரவென்று மிக்சியில் அரைக்க வேண்டும்.
  • அரைத்த மாவுடன் தனியே எடுத்து வைத்த ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிணைய வேண்டும்.
  • பின்பு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்ட வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் காய்ந்ததும் பருப்பு உருண்டையை வடையாக செய்து எண்ணெயில் போட வேண்டும்.
  • வடையை இருபுறமும் திருப்பி விட்டு வடை நன்கு வெந்ததும் எண்ணெய் இல்லாமல் வடித்து எடுக்க வேண்டும்.
  • இப்போது சூடான மசால் வடை ரெடி.

மசால் வடைக் குழம்பின் செய்முறை:

  • மசால் வடையை கடையிலும் வாங்கலாம் வீட்டிலும் சுடலாம்.
  • வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறியதாக நறுக்க வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றாமல் சோம்பு மற்றும் முந்திரியை வறுக்க வேண்டும்.
  • பின்பு தேங்காய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.அதனுடன் இஞ்சி சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கிராம்பு, பச்சை மிளகாய் போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.
  • பொறிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி, மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • நன்கு வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும்  வதக்க வேண்டும்.
  • நன்கு வதக்கிய பின்பு மூன்று டம்ளர் நீர் ஊற்றி குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • குழம்பு நன்கு கொதித்ததும் அதில் மசால் வடைகளை உள்ளே போட வேண்டும்.
  • வடை குழம்பிலுள்ள நீரைக் குடித்து விடும்.குழம்பு போதுமான அளவு கெட்டியானதும் மல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கி வைக்க வேண்டும்.
  • இப்போது சூடான மணமான மசால் வடைக் குழம்பு தயார்.இந்த மசால் வடைக் குழம்பை, சாதத்திற்கு ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
  • அதை விட இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி, ஆப்பம், இடியாப்பம் மற்றும் புரோட்டா ஆகியவற்றிற்குப் பொருத்தமான குழம்பு என்றால் அது மசால் வடைக் குழம்புதான்.

மருத்துவக் குணங்கள்:

  1. கடலைப் பருப்பில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது.
  2. இவற்றை உண்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கின்றன.
  3. இவை கண், இதயம், மூளை ஆகியவற்றை நன்கு வளரச் செய்கின்றன.
  4. இவை எலும்புகளுக்கு வலுவூட்டுகின்றன.
  5. புகழ்பெற்ற உணவு தானியம் என்றால் அது கடலைப் பருப்புதான்.
  6. அவை அதிகம் பிரபலமானது இந்தியாவில்தான்.

“ருசியான சமையல் செய்வோம்;ஆரோக்கியமான உணவு உண்போம்”.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (11 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. சுரைக்காய் = 1
  2. பச்சை மிளகாய் = 1
  3. வெங்காயம் = 1
  4. இஞ்சி = சிறிய துண்டு
  5. மிளகாய் தூள் = 2 ஸ்பூன்
  6. புளி = சிறிய உருண்டை
  7. தேங்காய் = 2 துண்டுகள்
  8. சீரகம் = 1 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் = சிறிதளவு
  10. மல்லித்தூள் = 2 ஸ்பூன்
  11. எண்ணெய் = தேவையான அளவு
  12. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • சுரைக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்து கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகத்தை அரைத்து கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
  • பிறகு கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளியை கரைத்து ஊற்றி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
  • பிறகு சுரைக்காய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து சுரைக்காய் நன்றாக வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

சுவையான, ஆரோக்கியமான சுரைக்காய் குழம்பு தயார். இதை அனைத்து வகையான சாதம், தோசை, ஆப்பம் மற்றும் இட்லி போன்றவற்றோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • சுரைக்காயின் மிக முக்கிய குணமாக உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வெப்பம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் திறன் மிக்கது.
  • உடலில் தேவையற்ற நீர் அனைத்தும் வியர்வை மற்றும் சிறுநீராக வெளியேற உதவும். சிறுநீர் பிரச்சனை வராமல் சிறுநீர் நன்கு வெளியேறும். மலச்சிக்கல் குறையும்.
  • தினமும் சுரைக்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை குறைக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலை வலிமைப்படுத்தும்.
  • உடலில் தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் பருமன் குறைய சுரைக்காய் சிறந்த உணவு.
  • முக்கியமாக சுரைக்காயை சமைக்காமல் சாப்பிடுவதை தவிர்க்கவும். சமைத்த சுரைக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகிறது.

சுரைக்காய் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமான வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (15 votes cast)

தேவையானபொருள்கள்:

  1. உருளைக்கிழங்கு- கால் கிலோ,
  2. பூண்டு- 2 பல்,
  3. வெங்காயம்- 1,
  4. தக்காளி – 1,
  5. கீறிய பச்சை மிளகாய்   – 1,
  6. புளி – நெல்லிக்காய் அளவு,
  7. கடுகு – அரை ‌டீஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு – அரை ‌டீஸ்பூன்
  9. சீரகம் – அரை ‌டீஸ்பூன்
  10. மஞ்சள் – அரை ‌டீஸ்பூன்,
  11. கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
  12. குழம்பு பொடி – ஒரு டீஸ்பூன்,
  13. கறிவேப்பிலை,
  14. எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
  15. மிளகாய்த்தூள் – தேவையான அளவு,
  16. உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:

  • உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்க வேண்டும்.
  • சட்டியில் எண்ணெ‌யை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும் உளுந்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.
  • நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி,உருளைக்கிழங்கு,  ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  • மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு  பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின்பு  புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும்.
  • இறுதியாக உப்பு போட்டு, நன்றாக கொதித்ததும் இறக்க வேண்டும்.

மருத்துவக் குணங்கள்:

  • உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன.
  • உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் கிடைக்கின்றன.
  • உருளைக்கிழங்கு அதிக நார்ச்சத்தும்,  பொட்டாசியம் சத்தும் கொண்டது.
  • உடலைஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
  • பச்சை உருளைக்கிழங்கு வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள்ஆகியவற்றைக் குணமாக்க வல்லது.
  • உருளைக்கிழங்கு சாற்றை தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் மற்றும் இரப்பைக்கோளாறுகள் நீங்கும்.

“ருசியான உணவு உண்போம் சுவையானஆ‌‌‌ரோக்கியம் காண்போம்”.

VN:F [1.9.22_1171]
Rating: 4.4/5 (8 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. கொண்டைக்கடலை (கருப்பு) = 1 கப்
  2. தக்காளி = 1
  3. வெங்காயம் = 1
  4. பூண்டு = 2 பல்
  5. இஞ்சி = அரை துண்டு
  6. தேங்காய் = 2 துண்டுகள்
  7. சீரகம் = 1 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் = தேவையான அளவு
  9. மல்லித்தூள் = 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
  11. புளி = சிறிய உருண்டை
  12. கடுகு = 1 ஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  14. எண்ணெய் = தேவையான அளவு
  15. உப்பு = தேவையான அளவு
  16. கறிவேப்பிலை = தேவையான அளவு

செய்முறை:

  • கொண்டைக்கடலையை இரவே ஊற வைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகத்தை விழுதாக அரைத்து கொள்ளவும். ஊற வைத்த கடலையை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு மற்றும் இஞ்சி போட்டு கிளறி வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி சிறிது வெந்ததும் தேங்காய், சீரக விழுதை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு கிளறி புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சூடான, ஆரோக்கியமான “கொண்டைக்கடலை புளிக்குழம்பு” தயார். இதை சாதம், சப்பாத்தி, பூரி, தோசை மற்றும் இட்லி போன்றவற்றோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • கொண்டைக்கடலையில் புரதம், கலோரி, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவை காணப்படுகிறது.
  • மேலும் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன.
  • உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க முளைக்கட்டிய கொண்டைக்கடலையில் இருக்கும் ஹார்மோன் பெரிதும் உதவுகிறது. நீரிழிவு இருப்பவர்கள் சாப்பிட கூடிய உணவு. கொழுப்பு மிக குறைந்த அளவே காணப்படுகிறது.
  • குறிப்பாக வெள்ளை கொண்டைக்கடலையை விட கருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவில் நார்ச்சத்து காணப்படுகிறது.

இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (10 votes cast)

தேவையான பொருள்கள்:
  1. பச்சை மிளகாய் = 10
  2. குடை மிளகாய் = 2
  3. சின்ன வெங்காயம் = 12
  4. தக்காளி = 1
  5. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  6. புளி = சிறிய உருண்டை
  7. வெந்தயம் = 1 ஸ்பூன்
  8. சீரகம் = 1 ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாய்  சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.
  • பிறகு புளியை கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “மிளகாய் குழம்பு” தயார். இதை அனைத்து விதமான சாததோடும் பரிமாற சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • மிளகாயில் அதிகமாக வைட்டமின் “சி” உள்ளது.  இது உடலுக்கு வெப்பத்தை தருகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க செய்கிறது.  மிளகாயை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்தினால் இது பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • குடை மிளகாயை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். குடை மிளகாயில் கொலஸ்ட்ரால், சோடியம் மற்றும் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாக இருக்கிறது.
  • கண் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கூந்தல் பிரச்சனைகள் ஆகியவை வராமல் தடுக்கும். மேலும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் “ஏ”, வைட்டமின் “பி”, வைட்டமின் “சி” மற்றும்  வைட்டமின் “ஈ” போன்றவை காணப்படுகிறது.

மிளகாயை சரியான அளவில் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி வாழலாம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (11 votes cast)

தேவையான பொருள்கள்:
  1. அரைக்கீரை = 1 கட்டு
  2. பச்சை மிளகாய் = 3
  3. பூண்டு = 5 பல்
  4. தக்காளி = 4
  5. சின்ன வெங்காயம் = 5
  6. கடுகு = அரை ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  8. சீரகம் = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • அரைக்கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • குக்கரில் கீரை, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து மத்தினால் நன்கு கடையவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கடைந்து வைத்த கீரை கலவையை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “அரைக்கீரை குழம்பு” தயார். இதை சாதத்தோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • அரைக்கீரையில் தாதுக்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் மஞ்சள் காமாலை, புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
  • அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு பாதிப்பு குறையும். ஜலதோஷம், உடல் சூடு, சளி, சுரம், இருமல், பித்தம் ஆகியவற்றை குறைக்கும்.
  • கீரையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
  • பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும். இரத்த உற்பத்தி அதிகரிக்கும். பசியின்மை குறையும். கூந்தல் நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும். இளநரை வராமல் தடுக்கும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (13 votes cast)

Page 1 of 1012345...10...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers