17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

ஆரோக்கிய சமையல்

Page 1 of 8712345...102030...Last »

தேவையான பொருள்கள்:

  • தொட்டாற்சிணுங்கி வேர்
  • நீர் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • பின் 40 கிராம் அளவு மண் சட்டியில் எடுத்து மூன்று பங்கு நீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் வரை நன்கு காய்ச்சி கசாயம் தயார் செய்து கொள்ள  வேண்டும்.
  • பின் அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை என சாப்பிட்டு வந்தால் தளர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி பெறும்.
  • மேலும் விந்தணு பிரச்‌சனையும் தீரும். எனவேதான் இதற்கு காமவர்த்தினி என்ற பெயர் வந்தது.

தொட்டாற்சிணுங்கி சூப்பின் மருத்துவக்குணங்களை உணர்ந்து  நம் அன்றாட உணவுடன் கஷாயமாக பயன்படுத்துவோம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (60 votes cast)

தேவையானப் பொருள்கள்:

  1. பாஸ்மதி அரிசி – 2 கப்
  2. பெரிய வெங்காயம் – 2
  3. கேரட் -2
  4. பச்சை பட்டாணி – 100 கிராம்
  5. பீன்ஸ் – 50 கிராம்
  6. காலிஃப்ளவர்- 100 கிராம்
  7. பச்சை மிளகாய் – 2
  8. இஞ்சி பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  9. பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  10. சீரகம்-அரைத் தேக்கரண்டி
  11. மல்லி
  12. புதினா தழை – சிறிதளவு
  13. பட்டை – ஒரு அங்குலம்
  14. கிராம்பு – 2
  15. ஏலக்காய் – 2
  16. பிரியாணி இலை – சிறிதளவு
  17. எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
  18. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • வெங்காயத்தை நீளாமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • கேரட் மற்றும் பீன்சை அரைத் துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
  • காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வெந்நீரில் அலசி வைக்க வேண்டும்.
  • பட்டை கிராம்பு ஏலக்காய் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்பு அதனுடன் நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதனுடன் இஞ்சி பூண்டு மற்றும்  அரைத்த மசாலா சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
  • இறுதியாக அதில் தேவையான காய்கறிகள் அனைத்தும் சேர்த்து  மிதமாக கிண்ட வேண்டும்.
  • பின்பு ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து நான்கு கப் நீர் ஊற்றி கொதிக்கும் வரை மூடி வைக்க வேண்டும்.
  • கொதித்ததும் உப்பு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
  • பத்து நிமிடம் கழித்ததும் மூடியை திறந்து சாதத்தை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தேசியக்கொடியைப் போல் அலங்கரிக்க வேண்டுமென்றால் சாதத்தின் இரு ஓரங்களிலும் அதாவது ஒரு பக்கம் பச்சை நிறத்தில் இருக்கும் பீன்ஸ், பட்டாணி, மல்லி மற்றும் புதினா இலைகளையும்
  • மற்றொரு பக்கத்தில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் கேரட்டையும், நடுவில் சாதத்தையும் வைத்துப் பார்த்தால் நம் நாட்டு தேசியக் கொடிப்போல் காட்சியளிக்கும் அழகைப் பார்த்து ருசித்து சாப்பிடலாம்.

மருத்துவக் குணங்கள்:

  • காய்கறிகளில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் அடங்கியுள்ளன.
  • காய்கறிகள் நம் ‌உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
  • நம் உடல் வலிமையைக் கூட்டுகிறது.
  • காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதால் ஆபத்தான நோய்களான இதயம் சம்பந்தமான நோய்கள், அதிக ரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய் ஆகிய நோய்களில் இருந்து காய்கறிகள் நம்மைப் பாதுகாக்கிறது.
  • காய்கறியில் வைட்டமின்கள்,உயிர்சத்துகள், நார்ச்சத்துகள், கால்சியம், அயன் மற்றும் ஜிங் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.
  • இத்தகைய சத்துகள் மற்றும் நன்மைகள் நிறைந்த காய்கறிகளை நாம் அனைவரும் விரும்பி உண்போம்.

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உணர்ந்து
நோயின்றி வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

 

VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (17 votes cast)

தேவையானப் பொருள்கள்:

  1. கடலை மாவு – 2 கோப்பை,
  2. சர்க்கரை – 3 கோப்பை,
  3. நெய் – கால் கோப்பை,
  4. முந்திரி(உடைத்தது) – கால் கோப்பை,
  5. திராட்சை – கால் கோப்பை,
  6. தண்ணீர்- 2 கோப்பை,
  7. ஏலப்பொடி – அரைத் தேக்கரண்டி,
  8. லட்டு கலர் – 2 சிட்டிக்கை.

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் இரண்டு கோப்பை அளவு கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடலை மாவுடன் நீரை ஊற்றி அதில் கலர் பொடியை சேர்த்து நன்கு கரைக்க வேண்டும்.
  • கரைத்த மாவின் பதம் தோசை மாவின் பதம் போன்று இருக்க வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் கரைத்து வைத்த மாவை லட்டுக் கரண்டி அல்லது சல்லடைக் கரண்டியால் எடுத்து  நன்கு காய்ந்த எண்ணெயில் ஊற்ற வேண்டும்.
  • பூந்தி நன்கு முத்து முத்தாக விழ வேண்டும்.அடுப்பின் அனலை மிதமாக எரிய விட வேண்டும்.
  • பூந்தி நன்கு வெந்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அனைத்து மாவையும் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மற்றும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகுவை அதாவது சர்க்கரையுடன் நீ்ரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
  • கொதித்ததும் மிதமான சூட்டில் பத்து நிமிடம் சர்க்கரை பாகுவை வைக்க வேண்டும்.
  • இதில் தனியே எடுத்து வைத்துள்ள பூந்தி, ஏலப்பொடி மற்றும் நெய்யில் வறுத்துள்ள முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • கைகளில் சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு கைப் பொறுக்கும் சூட்டில்  சிறு சிறு உருண்டையாகப் பிடிக்க வேண்டும்.
  • இப்போது அனைவரும் விழாக்காலங்களில் விரும்பி உண்ணும் லட்டு தயார்.

குறிப்பு:

  •   லட்டு பிடிக்க சரியாக வராவிட்டால் அதனுடன் சிறிது சூடான நீர் சேர்த்து லட்டு உருண்டை பிடிக்கலாம்.

மருத்துவக் குணங்கள்:

  • கடலை மாவில் இயற்கையாகவே புரோட்டீன் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
  • உதாரணமாக ஒரு கப் கடலை மாவில் 178 கலோரிகள் மற்றும் 3 கிராம் கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது.
  • கடலை  மாவை பலவிதமான உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.
  • கடலை மாவில் உள்ள வைட்டமின் ”பி-6” சத்து உடலில் உள்ள சிவப்பணுக்களை சீராக இயங்க வைக்கிறது.
  • மேலும் முகத்தில் உள்ள பரு, சரும வறட்சி, அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருப்புப் புள்ளிகள் மற்றும் பொலிவிழந்த கூந்தல் போன்றவற்றை இவைக் குணப்படுத்த வல்லது.
  • இத்தகைய நன்மை நிறைந்த பொருள் பூந்தி லட்டில் இருப்பதால் நாம் இவற்றை ருசித்து சாப்பிடலாம்.

“விழாக்காலம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது லட்டுதான் அத்தகைய சிறந்த இனிப்பு வகையான “லட்டுவை” நாம் அனைவரும் விரும்பி உண்போம்; மகிழ்ந்து வாழ்வோம்”.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (12 votes cast)

தேவையானப் பொருள்கள்:

  1. அரிசி சாதம் – அரை கப்,
  2. தயிர் – 2 கப்,
  3. பச்சை மிளகாய் – 1,
  4. கேரட்- 1,
  5. மாங்காய் – 1,
  6. மாதுளை – கால் கப்,
  7. திராட்சை – 20,
  8. ஆப்பிள் – 1,
  9. கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

  • பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • கேரட் மற்றும் மாங்காயை துருவிக் கொள்ள வேண்டும்.
  • ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • தயிருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை வேக வைத்த அரிசி சாதத்துடன் கலந்து வைக்க வேண்டும்.
  • பின்பு அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் நறுக்கிய பழ வகைகள் சேர்த்து நன்கு கிண்ட வேண்டும்.
  • இப்போது சூடான பழ தயிர் சாதம் தயார்.

மருத்துவக் குணங்கள்:

  • தயிரில் கால்சியம் மற்றும்  புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளது,இதில் பழ வகைகள் சேர்ப்பதால் வைட்டமின் சத்தும் நிறைந்துள்ளது.
  • இவற்றில் புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இவை ஜீரண சக்தியை அதிகம் பெற்றுள்ளது.
  • தயிர் நன்மை தரும் பாக்டீரியாக்களை உண்டாக்குகின்றன.
  • நன்மை தரும் பாக்‌டீயாக்களை உண்டாக்குவதால் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கின்றன.
  • இவை வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும் ஒரு அருமருந்தாகும்.
  • தயிரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தலையில் தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
  • இவை முடியை மிருதுவாக்கும் பண்பைப் பெற்றுள்ளது.
  • இவை நம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
  • மேலும் இவற்றை ஒரு குளிர்பானமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்தகைய நன்மைகள் நிறைந்த தயிரை நாம் அனைவரும் பருகுவோம்.
”100 டிகிரி வெயில் அதில் 0 டிகிரி குளிர் பழ தயிர் சாதம்” எனபதை உணர்ந்து
வெயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு நோயின்றி வாழ்வோம்;
வாழ்வில் வளம் பெறுவோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (12 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. மசால் வடை – 10
  2. வெங்காயம் – 75கிராம்
  3. பச்சை மிளகாய் – 2
  4. மல்லிப் பொடி -இரண்டு தேக்கரண்டி
  5. மிளகாய் பொடி – ஒன்றரைத் தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி – சிறிதளவு
  7. தேங்காய் துருவியது – 5 தேக்கரண்டி
  8. சோம்பு – அரைத் தேக்கரண்டி
  9. முந்திரி -5
  10.  இஞ்சி – சிறுதுண்டு
  11. சமையல் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
  12. கிராம்பு- 2
  13. மிளகு – கால் தேக்கரண்டி
  14. கறிவேப்பிலை – ஒரு தேக்கரண்டி
  15. மல்லி – ஒரு தேக்கரண்டி
  16. உப்பு – தேவையான அளவு

வடை செய்ய:

  • அரை கிலோ ஆழாக்குக் கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • நன்கு ஊறிய பிறகு நீரை சுத்தமாக வடிகட்ட வேண்டும்.
  • அதில் ஒரு தேக்கரண்டிப் பருப்பை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மீதி உள்ள கடலைப் பருப்பை உப்பு போட்டு பரபரவென்று மிக்சியில் அரைக்க வேண்டும்.
  • அரைத்த மாவுடன் தனியே எடுத்து வைத்த ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிணைய வேண்டும்.
  • பின்பு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்ட வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் காய்ந்ததும் பருப்பு உருண்டையை வடையாக செய்து எண்ணெயில் போட வேண்டும்.
  • வடையை இருபுறமும் திருப்பி விட்டு வடை நன்கு வெந்ததும் எண்ணெய் இல்லாமல் வடித்து எடுக்க வேண்டும்.
  • இப்போது சூடான மசால் வடை ரெடி.

மசால் வடைக் குழம்பின் செய்முறை:

  • மசால் வடையை கடையிலும் வாங்கலாம் வீட்டிலும் சுடலாம்.
  • வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறியதாக நறுக்க வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றாமல் சோம்பு மற்றும் முந்திரியை வறுக்க வேண்டும்.
  • பின்பு தேங்காய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.அதனுடன் இஞ்சி சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கிராம்பு, பச்சை மிளகாய் போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.
  • பொறிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி, மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • நன்கு வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும்  வதக்க வேண்டும்.
  • நன்கு வதக்கிய பின்பு மூன்று டம்ளர் நீர் ஊற்றி குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • குழம்பு நன்கு கொதித்ததும் அதில் மசால் வடைகளை உள்ளே போட வேண்டும்.
  • வடை குழம்பிலுள்ள நீரைக் குடித்து விடும்.குழம்பு போதுமான அளவு கெட்டியானதும் மல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கி வைக்க வேண்டும்.
  • இப்போது சூடான மணமான மசால் வடைக் குழம்பு தயார்.இந்த மசால் வடைக் குழம்பை, சாதத்திற்கு ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
  • அதை விட இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி, ஆப்பம், இடியாப்பம் மற்றும் புரோட்டா ஆகியவற்றிற்குப் பொருத்தமான குழம்பு என்றால் அது மசால் வடைக் குழம்புதான்.

மருத்துவக் குணங்கள்:

  1. கடலைப் பருப்பில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது.
  2. இவற்றை உண்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கின்றன.
  3. இவை கண், இதயம், மூளை ஆகியவற்றை நன்கு வளரச் செய்கின்றன.
  4. இவை எலும்புகளுக்கு வலுவூட்டுகின்றன.
  5. புகழ்பெற்ற உணவு தானியம் என்றால் அது கடலைப் பருப்புதான்.
  6. அவை அதிகம் பிரபலமானது இந்தியாவில்தான்.

“ருசியான சமையல் செய்வோம்;ஆரோக்கியமான உணவு உண்போம்”.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (11 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. வேர்க்கடலை =அரை கப்,
  2. தேங்காய் = 2 துண்டுகள்,
  3. கடுகு = தலா ஒரு ‌டீஸ்பூன்,
  4. உளுத்தம் பருப்பு = ஒரு ‌டீஸ்பூன்,
  5. சீரகத்தூள் = ஒரு ‌டீஸ்பூன்,
  6. புளிக்கரைசல்,
  7. நறுக்கிய வெங்காயம் = தலா ஒரு டேபிள் ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் = ஒன்றரை டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் = கால் டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை
  11. சமையல் எண்ணெய்
  12. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • புளிக்கரைசலை ஒரு பாத்திரத்தில்  எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள  வேண்டும்.
  • பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.
  • கொதித்ததும் வேக வைத்த வேர்க்கடலையை உள்ளே போட வேண்டும்.
  • பின்பு நன்கு கொதித்ததும் மற்றும் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு,  சீரகத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
  • பொன்னிறமாக மாறியதும் அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். இப்போது சூடான வேர்க்கடலைக் குழம்பு ரெடி.

மருத்துவக் குணங்கள்:

  1. வேர்க்கடலையானது ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருளாகும்.
  2. இதில் கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
  3. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகும்.
  4. வெங்காயத்தில் வைட்டமின் ”சி” சத்து நிறைந்துள்ளது.
  5. இவற்றை உண்பதால் உடல் வலிமைப் பெறுகிறது.
  6. எந்த ஒரு காரியத்திலும் சரியான தீர்மானம் எடுக்க உதவுகிறது. இவை அறிவை வளர்க்கிறது.
  7. வெங்காயத்தை சாப்பிடுவதால் அதிகமான காய்ச்சலைக் குணப்படுத்துகிறது.

”நம் தேசத்தலைவர் காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு “வேர்க்கடலை” ஆகும். அத்தகைய வேர்க்கடலையால் செய்யப்பட்ட உணவை நாம் அனைவரும் ருசியோடு உண்போம்.குசியோடு வாழ்வோம்.”

VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (13 votes cast)

Page 1 of 8712345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers