17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Jeyanthi

Page 1 of 25812345...102030...Last »

 

 

தேவையான பொருள்கள்:

  1. கேரட்.
  2. பால்.

செய்முறை:

  • கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (494 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. நிலவேம்பு = 25 கிராம்
  2. ஏலக்காய் = 5
  3. கிராம்பு = 5

செய்முறை:

  • ஏலக்காய் மற்றும் கிராம்பை பொடி செய்து வைத்து கொள்ளவும். நிலவேம்பு இலை மற்றும் பூவை எடுத்து அதனுடன் பொடி செய்து வைத்த ஏலக்காய் மற்றும் கிராம்பை சேர்த்து 500 மி.லி  தண்ணீர் கலந்து நன்றாக காய்ச்சி ஆற வைத்து குடித்து வர வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

  • 5 மி.லி அளவு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேளையும் குடித்து வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • வைரஸ் காய்ச்சல், சாதாரண காய்ச்சல், குளிர் காய்ச்சல், அஜீரணம், வாய்வு கோளாறுகள் ஆகியவை குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (91 votes cast)

தேவையானப் பொருள்கள்:

  • செண்பக மொட்டு – 50 கிராம்
  • கடுகுரோகிணி – 50 கிராம்
  • மஞ்சள் கடுக்காய் தோல் – 50 கிராம்
  • ஏலரிசி – 50 கிராம்
  • நேர்வாளப்பருப்பு – 140 கிராம்

செய்முறை:

  • செண்பக மொட்டு, கடுகுரோகிணி, மஞ்சள் கடுக்காய், ஏலரிசி ஆகிய நான்கையும்
  • இடித்து தூள் செய்து ஒரு துணியினால் வடிகட்டிக் கொள்ள வேணடும்.
  • பின்பு நேர்வாளப்பருப்பை பரவாலாக அரைத்து அதனுடன் தேவையான அளவு குளிர்ந்த தண்ணீர் சேர்த்து வெண்ணெய் போல் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இரண்டையும் சேர்த்து சிறு உருண்டை அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி ஒரு பளிங்குக் குப்பியில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அளவு:

  • 1 முதல் 2 மாத்திரை

துணைமருந்து:

  • கடுக்காய் தோல் – 3 கிராம்
  • மஞ்சட் கடுக்காய் தோல் – 5 கிராம்
  • அதிமதுரம் – 3 கிராம்
  • நெல்லிமுள்ளி – 3 கிராம்
  • ரேவல்சின்னி – 3 கிராம்
  • வால்மிளகு – 3 கிராம்
  • பறங்கிப்பட்டை – 3 கிராம்
  • கொட்டைப்பாக்கு – 3 கிராம்
  • கண்டந்திப்பிலி  – 3 கிராம்
  • அரிசித்திப்பிலி – 3 கிராம்

செய்முறை:

  • கடுக்காய் தோல், மஞ்சட் கடுக்காய் தோல், அதிமதுரம்,  நெல்லிமுள்ளி, ரேவல்சின்னி, வால்மிளகு, பறங்கிப்பட்டை, கொட்டைப்பாக்கு, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவைதயான அளவு தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பாகமாக காய்ச்சி வடிகட்ட வேண்டும்.
  • அவ்வாறு வடிகட்டின குடிநீரை இரவில் குடிக்க வேணடும். மீண்டும் மறுநாள் காலையில் மாத்திரைகளில் இரண்டை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
  • இதனை தொடர்ந்து மூன்று நாள் அல்லது ஐந்து நாள் சாப்பிட வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • சூலை பிரமேகம், அண்டவாயு, சுரம், பித்த வாயுஆகியவற்றை குணமாக்கும் மற்றும் கெட்ட  நீரை கழிச்சல் மூலமாக வெளியேற்றும்.
  • மேலும் இம்மாத்திரையை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வெந்நீர் பருகினால் கழிச்சல் சுலபமாக இருக்கும்.
  • உடலின் கெட்ட நீரை கழிச்சல் மூலம் வெளிப்படுத்துவதால் இதற்கு முஞ்சிஷ்பேதி மாத்திரை என்ற  பெயர் உண்டு.

மருத்துணவு:

  • நோய் வலிமை, உடல் வலிமை ஆகியவைகளுக்கு தகுந்தபடி கஞ்சி போன்ற ஆகாரம் பருக வேண்டும்.
  • மேலும் பத்தியம் மேற்கொள்ள வேண்டும்.

 ”சித்த மருத்துவம் மூலம் அறிவியல் கண்டுபிடிப்பு” என்பது வியக்கத்தக்க ஒன்று. எனவே இதன் மூலம் பலவிதமான நோய்கள் குணமாகின்றன. அத்தகைய கண்டுபிடிப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகளை நம் உடல் ‌ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம். நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (9 votes cast)

தேவையானப் பொருள்கள்:

செய்முறை:
சூரத்து நிலவாரை குடிநீர்:

  • ஒரு பாத்திரத்தில் குச்சி, காம்பு முதலியவை நீக்கி தூய்மை செய்த சூரத்து நிலவாரையை 100 கிராம் எடுத்து அதனுடன் அரை அளவு தண்ணீர் ஊற்றி நான்கில் ஒரு பாகமாக காய்ச்ச வேண்டும்.
  • பின் அதனை வடிகட்ட வேண்டும். அவ்வாறு வடிகட்டிய நீரையே சூரத்து நிலவாரை குடிநீர் என்பர்.

செய்முறை:

  • மஞ்சள் கடுக்காய் தோல், பிஞ்சு கடுக்காய் தோல், சூரத்து கடுக்காய் தோல், தான்றிக்காய் தோல், சடாமாஞ்சில், கோரைக்கிழங்கு, சோம்பு,  ரோஜா மொட்டு இதழ், நெல்லி முள்ளி, கடுகுரோகிணி ஆகியவற்றை இடித்து தூள் செய்து ஒரு துணியினால் வடிகட்ட வேண்டும்.
  • பின் திராட்சையையும், உப்பையும் கலந்து சோற்றுக்கற்றாழை மற்றும் சூரத்து நிலவாரை சாற்றுடன் சேர்த்து கடலை  அளவு மாத்திரை செய்து அதனை நிழலில் உலர்த்தி பளிங்குக் குப்பியில் எடுத்து வைக்க வேண்டும்.

அளவு:

  • 2 முதல் 6 மாத்திரைகள்

துணை மருந்து:

  • சர்க்கரை, கற்கண்டு, திராட்சைப் பழம், ஆகிய மூன்றையும் சமஅளவு சேர்த்து அரைத்த விழுது மற்றும் 2 முதல் 6 மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.
  • அல்லது ரோஜாப்பூ சர்பத், அப்திமூன் சர்பத் மற்றும் பல சர்பத் வகைகளிலும் சேர்த்து  சாப்பிடலாம்.

தீரும் நோய்கள்:

  • வாயுக்கள், நுண் புழுக்கள், மலச்சிக்கல், குடல், இரைப்பை ஆகியவற்றிலுள்ள அழுக்குகள் ஆகியவைகளை நீக்கும்.
  • உடலிலுள்ள சூட்டை தணிக்கும். உடல் நலமாக இருக்கும்.

”சித்த மருத்துவமே சிறந்த மருத்துவ முறை” என்பதை உணர்ந்து இவ்வகையான மாத்திரைகளை பயன்படுத்தி நோயின்றி வாழ முயல்வோம்; நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (5 votes cast)

தேவையானப் பொருள்கள்:

  • தூய்மை செய்த இரசம் – 5 கிராம்
  • சாதிலிங்கம் – 5 கிராம்
  • பொரித்த வெண்காரம் – 5 கிராம்
  • இந்துப்பு
  • மஞ்சள் கடுக்காய் தோலின் தூள் – 10 கிராம்
  • கடுகுரோகிணித்தூள் – 10 கிராம்
  • வெள்ளை காக்கரட்டான் வேர்த்தூள் -10 கிராம்
  • நேர்வாளப்பருப்பு – 25 கிராம்
  • பிரண்டை சாறு – தேவையான அளவு

செய்முறை:

  • இரசத்தையும், சாதிலிங்கத்தையும் தனியே அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் வெண்காரத்தையும், இந்துப்பையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அதன்பின் மற்ற தூள்களை இதனுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இறுதியாக நேர்வாளப்பருப்பை பொடித்து பிரண்டை சாற்றை சிறுக சிறுக வார்த்து மைபோல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன்பின் அனைத்து விதமான தூள்களையும் சேர்த்து மீண்டும் பிரண்டை சாற்றை சிறுக சிறுக வார்த்து கடலை அளவு மாத்திரை தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • பின் அதனை நிழலில் உலர்த்தி ஒரு பளிங்கு குப்பியில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அளவு:

  • 1 முதல் 2 மாத்திரை மலச்சிக்கலை போக்க 3 முதல் 4 மாத்திரைகள்  உட்கொள்ள வேண்டும்.

துணைமருந்து:

  • இஞ்சிச்சாறு

தீரும் நோய்கள்:

  • பலவகையான வாயுக்கள், வயிற்றுப் பகுதியில் உள்ள கட்டிகள், மந்தாக்கினி மற்றும் ஆமக்கட்டு ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.

மருத்துணவு:

  • மெண்மையான உணவு வகைகள், இரசம் சாதம், சூப்பு முதலிய‌வை மருத்துவ உணவாக பயன்படுகிறது.

இம்மாத்திரையை உபயோகிக்கும் முன் “மருத்துவரின் ஆலோசனை” கேட்டு உபயோகிக்க  வேண்டும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (5 votes cast)

தேவையானப் பொருள்கள்:

செய்முறை:

  • சுக்கு, மிளகு, அரிசித்திப்பிலி, மஞ்சள் கடுக்காய் தோல், தான்றிக்காய் தோல், நெல்லிமுள்ளி ஆகியவற்றை தனித்தனியாக இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும்.
  • தூய்மை செய்த இரசம், நெல்லிக்காய் கெந்தகம் ஆகிய இரண்டையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
  • நன்கு அரைத்ததும் தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • வெண்காரத்தை பொடித்துக்கொள்ள வேண்டும்.
  • தூள் செய்த மற்ற பொடி வகைகளுடன் வெண்காரப்பொடியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நேர்வாளப்பருப்பை நன்கு அரைத்து  சோற்றுக்கற்றாழைச்சாற்றை சிறுகசிறுக வார்த்து வெண்ணெய் போலான பதத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு இதனுடன் தூள் செய்யப்பட்ட பொடிவகைகளை சேர்த்து மீண்டும் சோற்றுக்கற்றாழைச்சாற்றை சிறுகசிறுக வார்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
  • பின்பு சிறு உருண்டை அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி பளிங்கு குப்பியில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அளவு:

  • 1 முதல் 2 மாத்திரை ஆனால் கழிச்சலுக்கு சாப்பிட வேண்டுமானால் 4 முதல் 5 மாத்திரை மேலும் உடல் தகுதிக்கு ஏற்ப சாப்பிட வேண்டும்.

துணைமருந்து:

  • வெல்லம், குல்கந்து, வெண்ணெய், வாழைப்பழம் முதலியவைகள்.

தீரும் நோய்கள்:

  • வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று விதமான நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.
  • வயிற்று வலி, குன்மம், குடல்வாயு போன்ற இரைப்பை சம்பந்தமான நோய்கள் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.
  • மேலும் சுரங்கள், வாயுக்கள், கபக்கட்டு, மேல் மூச்சு சுவாசம், சன்னி ஆகிய நோய்களை குணப்படுத்த வல்லது
  • குழந்தைகளுக்கான சுரம், மார்பு சளி, தொண்டையில்  கரகரப்பு, பொருமல், மாந்தம் ஆகிய நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.

இம்மருந்தானது கைமருத்துவம் என சொல்லப்படும் வைத்தியர்கள் வைத்திருக்கக் கூடிய முக்கியமான ஒன்றாகும். எனவே இம்மாத்திரையை “முதலுதவி” என சொல்லப்படும் அவசர வேளைகளில் பயன்படுத்தலாம். இம்மாத்திரை நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (7 votes cast)

Page 1 of 25812345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers