17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

உருண்டை

Page 1 of 11

தேவையான பொருள்கள்:

  1. முந்திரி – 2கப்
  2. கடலை மாவு – ஒன்றரை கப்
  3. பொடியாக நறுக்கிய புதினா – அரை கப்
  4. இஞ்சி – சிறிதளவு
  5. பச்சை மிளகாய் விழுது – 2 ஸ்பூன்
  6. சோம்பு – சிறிதளவு
  7. உப்பு – தேவைக்கு ஏற்ப
  8. நல்லெண்ணெய் –தேவைக்கு ஏற்ப

செய்முறை:

  1. கடலை மாவை சலித்து அதனுடன் முந்திரி ,புதினா,இஞ்சி ,பச்சை மிளகாய் விழுது ,சோம்பு, உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறி வையுங்கள்.
  2. கடாயில் எண்ணையை காயவைத்து பிசிறிவைத்திருக்கும் மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணையில் கிள்ளி போட்டு பொன்னிறத்தில் பொரித்தொடுக்கவும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.3/5 (3 votes cast)

தேவையானப்பொருட்கள்:

  1. அரிசிமாவு – 1 கப்
  2. வெல்லப்பொடி – 1/2 முதல் 3/4 கப் வரை
  3. நன்கு கனிந்த வாழைப்பழம் – 1
  4. பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
  5. ஏலக்காய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
  6. நல்லெண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

  1. 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  2. வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  3. அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  4. ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.
  5. அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும்.
  6. மேலும், இதை எண்ணையில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (2 votes cast)

தேவையானப்பொருட்கள்:

  1. பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
  2. பச்சரிசி மாவு – 3 கப்
  3. கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் – 2 கப்
  4. ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
  5. சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்
  6. தேங்காய்த்துருவல் – 1 கப்

செய்முறை:

  1. கருப்பட்டியில் அரை கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
  2. பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
  3. ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.
  4. இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
  5. சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும்.
  6. இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (2 votes cast)

தேவையானப்பொருட்கள்:

  1. பொட்டுக்கடலை – 3 கப்
  2. சர்க்கரை - 2 கப்
  3. நெய் - 1/2 கப்
  4. ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
  5. முந்திரிப்பருப்பு – 10 அல்லது 15

செய்முறை:

  1. பொட்டுக்கடலையையும், சர்க்கரையையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்து, சலித்து எடுக்கவும்.
  2. பொட்டுக்கடலை மாவை அளந்து ஒரு பாத்திரத்தில் போடவும். பொடித்த சர்க்கரையும் அதே அளவு இருக்க வேண்டும். சர்க்கரைப்பொடி கூடவோ, குறையவோ இருந்தால் அதற்கேற்றாவாறு சரி செய்து கொள்ளவும். மாவையும், சர்க்கரைப்பொடியையும் ஒன்றாகக் கலக்கவும். அத்துடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் சிறிது நெய்யை விட்டு சூடானதும், அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மாவில் போட்டு மீண்டும் நன்றாகக் கலக்கவும்.
  4. வாணலியில் எல்லா நெய்யையும் விட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, சூடாக்கவும்.
  5. ஒரு தட்டில், நாலைந்துக் கரண்டி பொட்டுக்கடலைமாவு கலவையைப் போட்டு, அதில் சிறிது சூடான நெய்யை விட்டுக் கிளறி, அதே சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும். இதே போல் எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, சூடான நெய் சேர்த்து உருண்டைகளைப் பிடித்தெடுக்கவும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (2 votes cast)

தேவையானப்பொருட்கள்:

  1. பச்சை பயறு – 2 கப்
  2. புழுங்கலரிசி – 1/2 கப்
  3. பொட்டு கடலை – 1/2 கப்
  4. தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 1/2 கப்
  5. வெல்லம் (தூளாக்கியது) – ஒன்றரைக் கப்
  6. ஏலக்காய் பொடி[/wikipop] – 1/2 டீஸ்பூன்
  7. சுக்குப் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

  1. வெறும் வாணலியில் பச்சைப்பயறையும், அரிசியையும், தனித்தனியாகப் போட்டு, சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் பொட்டுக்கடலையைப் போட்டு, 2 அல்லது 3 நிமிடங்கள் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்த்துண்டுகளைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் வறுத்த பயறையும், அரிசியையும் சிறிது சிறிதாகப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த மாவு, வறுத்த பொட்டுக்கடலை, தேங்காய்த்துண்டுகள், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
  3. அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி விட்டு மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சவும். அடுப்பை நன்றாகக் குறைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு தட்டில், 3 அல்லது 4 கரண்டி மாவைப் போட்டு, அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு கரண்டி வெல்லப்ப்பாகை ஊற்றி, ஒரு ஸ்பூனால் கலந்து, உடனடியாக உருண்டை பிடிக்கவும். தட்டிலுள்ள மாவில் பாகு அதிகமாக தெரிந்தால், அதில் மேலும் சிறிது மாவைச் சேர்த்துக் கொள்ளவும். மாவு அதிகமாக இருந்தால் பாகைச் சேர்த்துக் கொள்ளவும். இப்படியே எல்லா மாவையும் பாகையும் சேர்த்து உருண்டை பிடிக்கவும். சில சமயங்களில், பாகு அடுப்பிலேயே இருப்பதால் கெட்டியாகி விடும், அப்பொழுது ஓரிரு டீஸ்பூன் தண்ணிரைச் சேர்த்து பாகை கிளறி விடவும்.
  5. மேற்கண்ட அளவிற்கு சுமார் 20 உருண்டைகள் கிடைக்கும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (2 votes cast)

Page 1 of 11

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers