17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: February 2014

Page 1 of 11

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  • தாழம்பூவை  சிறியதாக நறுக்கி நீர் விட்டு காய்ச்ச வேண்டும்.
  • நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாகுபாதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
  • இதேபோன்று தாழம்பூ வேரினை பயன்படுத்தியும் செய்யலாம்.

மருத்துவக்குணங்கள்:

  • இவ்வாறு தாழம்பூ மணப்பாகினை அருந்துவதால் உடல்சூடு தணியும். பித்தம் குறையும் அதிகளவில் சிறுநீர் வெளியாவதை  தடுக்கலாம்.
  • தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வந்தால் அம்மைநோய் வராமல் தடுக்கலாம்.
  • தாழம்பு வேரினை கொண்டு தயாரித்த மணப்பாகினை உட்கொள்வதால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (139 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. நிலவேம்பு = 25 கிராம்
  2. ஏலக்காய் = 5
  3. கிராம்பு = 5

செய்முறை:

  • ஏலக்காய் மற்றும் கிராம்பை பொடி செய்து வைத்து கொள்ளவும். நிலவேம்பு இலை மற்றும் பூவை எடுத்து அதனுடன் பொடி செய்து வைத்த ஏலக்காய் மற்றும் கிராம்பை சேர்த்து 500 மி.லி  தண்ணீர் கலந்து நன்றாக காய்ச்சி ஆற வைத்து குடித்து வர வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

  • 5 மி.லி அளவு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேளையும் குடித்து வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • வைரஸ் காய்ச்சல், சாதாரண காய்ச்சல், குளிர் காய்ச்சல், அஜீரணம், வாய்வு கோளாறுகள் ஆகியவை குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (89 votes cast)

தேவையான பொருள்கள்:

  • தொட்டாற்சிணுங்கி வேர்
  • நீர் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • பின் 40 கிராம் அளவு மண் சட்டியில் எடுத்து மூன்று பங்கு நீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் வரை நன்கு காய்ச்சி கசாயம் தயார் செய்து கொள்ள  வேண்டும்.
  • பின் அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை என சாப்பிட்டு வந்தால் தளர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி பெறும்.
  • மேலும் விந்தணு பிரச்‌சனையும் தீரும். எனவேதான் இதற்கு காமவர்த்தினி என்ற பெயர் வந்தது.

தொட்டாற்சிணுங்கி சூப்பின் மருத்துவக்குணங்களை உணர்ந்து  நம் அன்றாட உணவுடன் கஷாயமாக பயன்படுத்துவோம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (60 votes cast)

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  • அதிமதுரத்தை நீர் விட்டு காய்ச்சிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் குளிக்க வேண்டும். அவ்வாறு தேய்த்து குளித்தால் தலைமுடி கருமையாக மாறும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (93 votes cast)

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  • எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கால் வெடிப்புகளில் பூசினால் கால் வெடிப்பு மறைந்து கால் பளபளப்பாக மாறும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (61 votes cast)

Page 1 of 11

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers