17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: January 2014

Page 1 of 212

வெந்தயக்கீரை

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  • வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும்.

குறிப்பு:

  • வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.

முகத்திற்கு எண்ணெய் மசாஜ்:

  • நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.
  • இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக  தோன்றும்.

“உடலுக்கு அழகு வலிவு; உதட்டுக்கு அழகு பொலிவு” என்ற கவிதையை உணர்ந்து முகம் பொலிவுடன் காண  வெந்தயக்கீரையை உணவில் பயன்படுத்துவோம். முகப்பொலிவுடன் வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (72 votes cast)

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகள்:

பீட்ரூட்:

  • பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.

மருத்துவக்குணங்கள்:

  • பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.
  • உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.
  • உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
  • கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
  • இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
  • எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது.
  • மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.

முள்ளங்கி:

  • முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதனை சமைக்கும்போது ஒருவிதமான வாடை உண்டாகும். எனவே இதனை யாரும் விரும்புவதில்லை. இருந்தாலும் இதன் மருத்துவகுணங்களை உணர்ந்து இதனை பயன்படுத்துவோர் பலர்.

முள்ளங்கியின் வகைகள்:

  • சிவப்பு முள்ளங்கி
  • வெள்‌ளை முள்ளங்கி

மருத்துவக்குணங்கள்:

  • முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை இனிமையாக மாற்றுகிறது.
  • முள்ளங்கி பசியை தூண்டுகிறது. மூத்திரக்காயில் உண்டாகும் கற்களை இவை கரைய செய்கின்றன.
  • சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
  • மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
  •  முள்ளங்கி சூப்பு நரம்பு சுருள்களை நீக்கும்.
  • அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியானது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் பெற்றுள்ளன.

கேரட்:

  • காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும்.குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும்.

மருத்துவக்குணங்கள்:

  • கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் “ஏ” வைட்டமின் “கே”, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
  • மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி  கேரட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
  •  எனவே தினமும் ஒரு கேரட்  சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதை தடுக்கலாம்.
  • கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை கூர்மையாகும்.

இஞ்சி:

  • இஞ்சியானது சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.

மருத்துவக்குணங்கள்:

  •  இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
  • இஞ்சிப் பசியைத் தூண்டும்.
  • அஜீரணத்தை போக்கும்.
  • கபத்தைக் குணப்படுத்தும்.
  • ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும்.
  • அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.

உருளைக்கிழங்கு:

  • உருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ‌ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்.

மருத்துவக்குணங்கள்:

  • உருளைக்கிழங்கில் உடலிற்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது.
  • மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது.
  • மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள்  நிறைந்துள்ளது.

கருணைக்கிழங்கு:

  • கருணைக்கிழங்கின் வேறு பெயர்கள் காறாக்கருணை மற்றும் சேனைக்கிழங்கு ஆகும்.

மருத்துவக்குணங்கள்:

  • கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், இரத்த மூலம், முளை மூலம் ஆகியவற்றை குணப்படுத்தும்
  • மேலும் கருணைக்கிழங்கு பசியை தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

குறிப்பு:

  • கருணைக்கிழங்கை சமைக்கும்போது சிறிது புளி சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவக்குணங்களை உணர்ந்து அவற்றை நம் அன்றாட உணவில் பயன்படுத்துவோம். ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (50 votes cast)

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  • கொத்தமல்லி கீரையை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வேண்டும்.
  • அவ்வாறு சாப்பிட்டால் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துகளை விட அதிக சத்துகளை இதிலிருந்து பெறலாம்.

மருத்துவக்குணங்கள்:

  • கொத்தமல்லி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
  • இதனால் தாது விருத்தியாகி மகப்பேறுக்கு வழிவகுக்கும்.
  • கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
  • குழந்தையின் எலும்புகளும், பற்களும் உறுதியடைவதோடு தோல் சம்பந்தமான நோய்களும் தாக்காது.

இத்தகைய நன்மைகள் நிறைந்த இந்த “கொத்தமல்லி தழையை” நாம் நம் அன்றாட உணவில் பயன்படுத்துவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (46 votes cast)

முட்டைகோஸ் சூப்:

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  • முதலில் முட்டைகோஸை நன்கு கழுவி சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின் கடாயில் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
  • தாளித்ததும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • நன்கு வதங்கிய பின்பு நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்க வேண்டும்.
  • அதன்பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
  • நன்கு கொதித்ததும் அதனை வடிகட்டி மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து குடிக்க வேண்டும்.

மருத்துவக்குணங்கள்:

  • முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும்.
  • உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும்.
  • முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை செரிமான மண்ட‌லத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்‌சனையை குணமாக்கும்.
  • மேலும் உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.

குறிப்பு:

  • காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உடல் கொழுப்பு கரையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (22 votes cast)

                                                     பூவரசம் பூ

  • இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம் பூக்கள் எண்ணற்ற மருத்துவக்குணங்களைப் பெற்றுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பூச்சிக்கடி மற்றும் வண்டுக்கடி போன்ற விஷக்கடிகளுக்கு இந்த பூக்களைப் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

                                            மருத்துவக்குணங்கள்

தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக:

  • தோல் ‌நோயினால் அவதிப்படுபவர்கள் பூவரசம் பூவை நன்கு அரைத்து அவற்றின் மீது தடவினால் தோல்நோய் குணமாகும்.

விஷக்கடி குணமாக:

  • பூச்சிக்கடி, வண்டுக்கடி போன்ற விஷப்பூச்சிகள் கடிப்பதால் உண்டாகும் தோல்சம்பந்தமான  நோய்கள் குணமாக வேண்டுமெனில் பூவரசம் பூவை 25 கிராம அளவு எடுத்து நன்கு அரைத்து  அதில் 200 மிலி நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் நீர் பாதியாக வற்றியவுடன் அ‌தனை வடிகட்டி தொடர்ந்து மூன்று ந‌ாளைக்கு காலை, மாலை என இருவேளை பருகி வந்தால் தோல்சம்பந்தமான நோய்களான ஊறல், தடிப்பு, அரிப்பு, வீக்கம், மயக்கம் மற்றும் சோம்பல் ஆகியவை குணமாகும்.

குறிப்பு:

  • இவ்வகையான கஷாயத்தை உட்கொள்ளும்போது எண்ணெய், கடுகு போன்றவற்றை போட்டு தாளிக்காமல் சாப்பிட வேண்டும். மேலும் மீன் கருவாடு போன்றவற்றை சாப்பாட்டில் சேர்க்கக்கூடாது.

மூட்டுவீக்கம் குணமாக:

  •  மூட்டு வீக்கத்தால் துன்பப்படும் வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் பூவரசம் பூ, காய், பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

இத்தகைய மருத்துவக்குணங்களைப் பெற்ற இந்த “பூவரசம் பூவை” நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக உண்போம்; உலகில் நோயின்றி வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.6/5 (11 votes cast)

கீழாநெல்லி:

  • கீழாநெல்லி மூலிகை நீர்க்கசிவுள்ள மணற்பாங்கான இடங்களில் பயிராகக் கூடியது.
  • ஒரு கீழாநெல்லிச் செடியை தலைகீழாகத் தூக்கி பார்த்தால் இலையின் அடிப்பாகத்தில் நெல்லிக்காய் போன்ற வடிவத்தில் ஆரம் தொடுத்தாற் போல் மிகவும் அழகாகச் சிறு சிறு காய்கள் மறைந்திருப்பதைக் காணலாம்.
  • எனவேதான் இதற்கு ”கீழ்க்காய் நெல்லி” என சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

தேக பலமுண்டாக:

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  • கீழ்க்காய் நெல்லிச்செடியை நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும்.
  • பின் தேற்றாங்கொட்டை 70 கிராம் எடுத்துப் பசும்பால் சேர்த்து வேக வைத்து சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • பின் தூள் செய்யப்பட்ட கீழாநெல்லி இரண்டு தேக்கரண்டியும்,  தேற்றாங்கொட்டை சூரணம் கால் கரண்டியும் எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் இதனை 175 மில்லி லிட்டர் காய்ச்சிய பசும்பாலில் கலந்து சிறிது சர்க்கரையும் சேர்த்து தினமும் காலை வேளை மட்டும் பருகி வந்தால் தேகபலமும், அழகும் உண்டாகும்.

சீதபேதி குறைய:

  • கீழாநெல்லி  இலையின் கொழுந்தை கசாயமிட்டு 60 கிராம் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வந்தால் சீதபேதி குறையும்.

நீடித்த சீதபேதி குறைய:

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  • கற்கடகசுங்கி என்று சொல்லப்படும் கடுக்காய் பூ 10 கிராம், வெள்ளைக் காய்ச்சுக் கட்டி 10 கிராம், மாசிக்காய் 10 கிராம், மாதுளை ஓடு 10 கிராம், வசம்பு 10 கிராம் மற்றும் கீழாநெல்லி சூரணம் ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை 500 மிலி தண்ணீரில் சேர்த்து கால் பாகமாக சுண்டக்காய்ச்சி தினமும் இருவேளை 30 மிலி வீதம் குடித்து வந்தால் இரண்டு  நாட்களிலே சீதபேதி குணமாகும்.
  • மேலும் மருந்துகளை பொன் வறுவலாக வறுத்து சூரணம் செய்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து 5 கிராம் வெண்ணெய் அல்லது நெய்யில் சேர்த்து சாப்பிடலாம்.

பத்தியம்:

  • காரம், புளிப்பு சேர்ந்த உணவு வகைகளை நீக்க வேண்டும்.
  • பால் அல்லது தயிர் உணவு வகைகளை சேர்த்துக்கொள்ளவும்.
  • எளிதில் ஜீரணமாகக்கூடிய ஜவ்வரிசிக் கஞ்சியையும் தயிர் சேர்த்து குடிக்கலாம்.

தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக:

  • இரண்டு பிடி கீழ்வாய் நெல்லி இலையோடு 10 கிராம் கந்தகத்தை சேர்த்து அரைத்து உடம்பு முழுவதும் பூசி வெந்நீரில் குளித்து வந்தால் உடனடியாக பயன் பெறலாம்.
  • மேலும் இலையை உப்பு சேர்த்து நெகிழ அரைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கு பூசி வந்தால் அவைகள் குணமாகும்.

மஞ்சள் காமாலை குணமாக:

தேவையான பொருள்கள்:

செய்முறை:

  • மஞ்சள் காமாலையை குணப்படுத்த வேண்டுமெனில் கீழாநெல்லி கீரையை தவிர வேறு மருந்து கிடையாது.
  • கீழாநெல்லிகாய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை என பத்து நாட்கள் உண்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
  • இதனை பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது.
  • காரம், புளியைத் தவிர்த்து பாதி உப்பு சேர்த்து பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பூரண குணமாகும்.

”வருமுன் காப்பாதே சிறந்தது” என்ற பழமொழியை உணர்ந்து இத்தகைய நன்மைகள் நிறைந்த கீழாநெல்லியை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம்; நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (11 votes cast)

Page 1 of 212

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers