17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: August 2013

Page 1 of 11

 

தேவையான பொருள்கள்:

  1. அவல் = அரை கப்
  2. துவரம் பருப்பு = 50 கிராம்
  3. உருளைக்கிழங்கு = 3
  4. வெங்காயம் = 1
  5. பச்சை மிளகாய் = 3
  6. சீரகம் = 1ஸ்பூன்
  7. உப்பு = தேவையான அளவு
  8. எண்ணெய் = தேவையான அளவு
  9. கொத்தமல்லி இலை = சிறிதளவு

செய்முறை:

  • கெட்டி அவலாக எடுத்து 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். நன்கு ஊறியதும் நீரை வடித்து வைத்து கொள்ளவும்.
  • சுத்தமான துவரம் பருப்பை எடுத்து அரைத்து மாவாக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஊறிய அவல், அரைத்த துவரம் பருப்பு மாவு, மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • பிறகு இதனுடன் கொத்தமல்லி இலையை நறுக்கி போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி வைத்து கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடை போட்டு பொன்னிறமாக எடுத்து சூடாக பரிமாறவும்.

மருத்துவ குணங்கள்:

  • அவலில் கலோரிகள் அதிகம் காணப்படுகிறது. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், சர்க்கரை, ஃபைபர், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை காணப்படுகிறது. பித்தத்தை குறைக்கும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை குணமாகும். சோர்வை குறைத்து உடலுக்கு வலிமை தரும். அதிகப்படியான எடையை குறைக்கும்.
  • உருளைக்கிழங்குகளில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
  • உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

 

VN:F [1.9.22_1171]
Rating: 3.4/5 (10 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. கொண்டைக்கடலை (கருப்பு) = 1 கப்
  2. தக்காளி = 1
  3. வெங்காயம் = 1
  4. பூண்டு = 2 பல்
  5. இஞ்சி = அரை துண்டு
  6. தேங்காய் = 2 துண்டுகள்
  7. சீரகம் = 1 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் = தேவையான அளவு
  9. மல்லித்தூள் = 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
  11. புளி = சிறிய உருண்டை
  12. கடுகு = 1 ஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  14. எண்ணெய் = தேவையான அளவு
  15. உப்பு = தேவையான அளவு
  16. கறிவேப்பிலை = தேவையான அளவு

செய்முறை:

  • கொண்டைக்கடலையை இரவே ஊற வைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகத்தை விழுதாக அரைத்து கொள்ளவும். ஊற வைத்த கடலையை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு மற்றும் இஞ்சி போட்டு கிளறி வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி சிறிது வெந்ததும் தேங்காய், சீரக விழுதை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு கிளறி புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சூடான, ஆரோக்கியமான “கொண்டைக்கடலை புளிக்குழம்பு” தயார். இதை சாதம், சப்பாத்தி, பூரி, தோசை மற்றும் இட்லி போன்றவற்றோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • கொண்டைக்கடலையில் புரதம், கலோரி, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவை காணப்படுகிறது.
  • மேலும் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன.
  • உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க முளைக்கட்டிய கொண்டைக்கடலையில் இருக்கும் ஹார்மோன் பெரிதும் உதவுகிறது. நீரிழிவு இருப்பவர்கள் சாப்பிட கூடிய உணவு. கொழுப்பு மிக குறைந்த அளவே காணப்படுகிறது.
  • குறிப்பாக வெள்ளை கொண்டைக்கடலையை விட கருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவில் நார்ச்சத்து காணப்படுகிறது.

இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (10 votes cast)

கண்டங்கத்தரி, வெள்ளறுகு, நிலவேம்பு, சிறுதேக்கு, விஷ்ணுகிரந்தி, பேராமுட்டி, சிற்றரத்தை, சுக்கு, செவ்வியம், திப்பிலி, சிறுகாஞ்சொறி வேர், கழற்றி வேர் மற்றும் திப்பிலிமூலம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து நீர் விட்டு சுண்டும் வரை நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் சளி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை குறையும்.

அறிகுறிகள்:

  • சளி
  • உடல் வலி
  • காய்ச்சல்

தேவையான பொருள்கள்

  1. கண்டங்கத்தரி
  2. வெள்ளறுகு
  3. நிலவேம்பு
  4. சிறுதேக்கு
  5. பேராமுட்டி
  6. விஷ்ணுகிரந்தி
  7. சிற்றரத்தை
  8. சுக்கு
  9. செவ்வியம்
  10. திப்பிலி
  11. சிறுகாஞ்சொறி வேர்
  12. கழற்றி வேர்
  13. திப்பிலிமூலம்

செய்முறை:

  • சம அளவு கண்டங்கத்தரி, வெள்ளறுகு, நிலவேம்பு, சிறுதேக்கு, விஷ்ணுகிரந்தி, பேராமுட்டி, சிற்றரத்தை, சுக்கு, செவ்வியம், திப்பிலி, சிறுகாஞ்சொறி வேர், கழற்றி வேர் மற்றும் திப்பிலிமூலம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

  • இந்த மூலிகையை காய்ச்சலின் போது 5 கிராம் அளவு எடுத்து 200 மி.லி நீர் விட்டு 50 மி.லி ஆக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி காலை, மாலை குடித்து வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • ச‌ளி சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும். அதிக சளியினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் அனைத்து விதமான வைரஸ் காய்ச்சலுக்கும் இந்த மூலிகை மிகச்சிறந்த மருந்தாகும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.8/5 (4 votes cast)

Page 1 of 11

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers