17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: June 2013

Page 1 of 11

தேவையான பொருள்கள்:

  1. உளுந்து = 1 கப்
  2. கடலைப்பருப்பு = 1 கப்
  3. மிளகு = 1 ஸ்பூன்
  4. தேங்காய் = 1 துண்டு
  5. இஞ்சி = சிறிய துண்டு
  6. பெருங்காயம் = சிறிதளவு
  7. எண்ணெய் = தேவையான அளவு
  8. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • உளுந்து, கடலைப்பருப்பு இரண்டையும் நன்றாக ஊற வைத்து கொள்ளவும். நன்றாக ஊறியதும் தோல் இல்லாமல் கழுவி நீரை வடித்து விட்டு நீர் விடாமல் பஞ்சு போல அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பிறகு கடலைப்பருப்பையும் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும். இரண்டு மாவையும் கலந்து கொள்ளவும்.
  • பிறகு இதனுடன் மிளகு, தேங்காய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு சிறிய உருண்டையாக உருட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இதை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான, ஆரோக்கியமான மைசூர் போண்டா தயார். இதை தேங்காய் சட்னியோடு பரிமாற சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • உளுந்தில் புரதம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து ஆகியவை காணப்படுகிறது. குறைந்த அளவு கொழுப்பு காணப்படுகிறது. மேலும் வைட்டமின் “சி” நிறைந்துள்ளது. உடல் சதை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த உதவும். வாத கோளாறுகளை கட்டுப்படுத்தும்.

இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (10 votes cast)

தேவையான பொருள்கள்:

  1.  கோதுமை மாவு = 250 கிராம்
  2. பாசிப்பருப்பு = 1 ஸ்பூன்
  3. கடலை பருப்பு = 1ஸ்பூன்
  4. மிளகுத்தூள் = அரை ஸ்பூன்
  5. சீரகத்தூள் = அரை ஸ்பூன்
  6. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும். இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு கலந்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
  • கோதுமை மாவை பிசைந்து பூரியாக செய்து வதக்கிய விழுதை சிறிதளவு எடுத்து வைத்து மூடி வைத்து பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சுவையான, ஆரோக்கியமான “பருப்பு பூரி” தயார்.

மருத்துவ குணங்கள்:

  • பாசிப்பருப்பில் பொட்டாசியம் , கால்சியம், பாஸ்பரஸ், ஸ்டார்ச், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • தாதுப்பொருள், நார்ச்சத்து நிறைந்துள்ளது. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. சருமத்தை பாதுகாக்கிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.
  • உடல் வெப்பத்தை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குறைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு.
VN:F [1.9.22_1171]
Rating: 4.4/5 (23 votes cast)

தேவையான பொருள்கள்:
  1. வெள்ளரிக்காய் = 1 துண்டு
  2. தயிர் =  2 கரண்டி
  3. பச்சை மிளகாய் = 1
  4. தேங்காய் = 1 ஸ்பூன்
  5. கடுகு = அரை ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள் = அரை ஸ்பூன்
  7. கறிவேப்பிலை = சிறிதளவு
  8. தேங்காய் எண்ணெய் = தேவையான அளவு
  9. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டு கொள்ளவும். தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் வெள்ளரிக்காய் சேர்த்து ஒரு கிளறு கிளறி தேவையான அளவு உப்பு கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக வைத்து அதனுடன் அரைத்த தேங்காயை போட்டு கிளறி இறக்கி சிறிது ஆறியதும் தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சுவையான தயிர் வெள்ளரி தயார். இதை நன்கு ஆற வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சாதத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவு கொண்டது. அதிக அளவு ஈரப்பதம் கொண்டது. சுண்ணாம்புச்சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, சல்பர், சிலிக்கான், கால்சியம், பாஸ்பரஸ். இரும்பு, வைட்டமின் “B” மற்றும் வைட்டமின் “C” ஆகியவை காணப்படுகிறது.
  • இது சிறுநீரகம், பித்த நீர் ஆகியவை சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் குறைக்கும் சக்தி மிகுந்தது. உடல் எடை குறைய நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
  • வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் வறட்சி குறைந்து உடல் குளிர்ச்சி பெறும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (7 votes cast)

Page 1 of 11

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers