17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: May 2013

Page 1 of 11
தேவையான பொருள்கள்:
  1. பச்சை மிளகாய் = 10
  2. குடை மிளகாய் = 2
  3. சின்ன வெங்காயம் = 12
  4. தக்காளி = 1
  5. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  6. புளி = சிறிய உருண்டை
  7. வெந்தயம் = 1 ஸ்பூன்
  8. சீரகம் = 1 ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாய்  சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.
  • பிறகு புளியை கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “மிளகாய் குழம்பு” தயார். இதை அனைத்து விதமான சாததோடும் பரிமாற சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • மிளகாயில் அதிகமாக வைட்டமின் “சி” உள்ளது.  இது உடலுக்கு வெப்பத்தை தருகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க செய்கிறது.  மிளகாயை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்தினால் இது பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • குடை மிளகாயை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். குடை மிளகாயில் கொலஸ்ட்ரால், சோடியம் மற்றும் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாக இருக்கிறது.
  • கண் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கூந்தல் பிரச்சனைகள் ஆகியவை வராமல் தடுக்கும். மேலும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் “ஏ”, வைட்டமின் “பி”, வைட்டமின் “சி” மற்றும்  வைட்டமின் “ஈ” போன்றவை காணப்படுகிறது.

மிளகாயை சரியான அளவில் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி வாழலாம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (11 votes cast)

தேவையான பொருள்கள்:

செய்முறை:
  • அரிசியை ஊற வைக்கவும். கிழங்கை தோல் உரித்து துருவி வைத்து கொள்ளவும்.
  • சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • அரிசி நன்றாக ஊறியதும் அரிசி மற்றும் துருவிய கிழங்கு இரண்டையும் மை போல தண்ணீர் சேர்க்காமல் வடை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • பிறகு இதனுடன் நறுக்கி வைத்த கலவையை கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பதமாக வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சூடான மரவள்ளிக்கிழங்கு வடை தயார். இதை சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். மிகவும் ஆரோக்கியமானது.

மருத்துவ குணங்கள்:
  • மரவள்ளிக்கிழங்கில் கலோரிகள் அதிகம் காணப்படுகிறது. ஸ்டார்ச் அதிகமாக நிறைந்த உணவு. குறைந்த அளவே கொழுப்பு காணப்படுகிறது.
  • புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், சோடியம் மற்றும் வைட்டமின் “B”, வைட்டமின் “C”, வைட்டமின் “E” மற்றும்  வைட்டமின் “K” ஆகியவை நிறைந்துள்ளது.
  • மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் வேர்க்குரு, வாதம் மற்றும் வயிற்று கிருமிகள் குறையும். இது ஒரு கிருமி நாசினியாக உள்ளது.
VN:F [1.9.22_1171]
Rating: 4.4/5 (9 votes cast)

தேவையான பொருள்கள்:
  1. முருங்கைக்காய் = 20 கிராம்
  2. பயத்தம் பருப்பு = 25 கிராம்
  3. வெங்காயம் = 4
  4. தக்காளி = 2
  5. மிளகு = 5 கிராம்
  6. பட்டை = 1
  7. கிராம்பு = 1
  8. தேங்காய் பால் = 100 மி.லி
  9. நெய் = 1 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் முருங்கைக்காயை லேசாக வதக்கி இறக்கி தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போடவும். பருப்பு வெந்ததும் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
  • பிறகு வாணலியில் சிறிது நெய்யை விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி பிறகு பட்டை, கிராம்பு போட்டு கிளறி தக்காளி போட்டு வதக்கி பிறகு வேக வைத்த முருங்கைக்காய் கலவையை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி கொதிக்க வைத்து வடிக்கட்டி சூடாக பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “முருங்கைக்காய் சூப்” தயார்.
மருத்துவ குணங்கள்:
  • முருங்கைக்காயில் வைட்டமின்  A, வைட்டமின் C, கால்சியம்,  பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது.
  • உயர் இரத்த அழுத்தம், விந்து விருத்தி, வாதம் போன்றவவை குறையும். மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும்.
  • தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும். விந்து குறைபாட்டை குறைத்து விந்து உற்பத்தியை அதிகரிக்கும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (18 votes cast)

தேவையான பொருள்கள்:
  1. அரைக்கீரை = 1 கட்டு
  2. பச்சை மிளகாய் = 3
  3. பூண்டு = 5 பல்
  4. தக்காளி = 4
  5. சின்ன வெங்காயம் = 5
  6. கடுகு = அரை ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  8. சீரகம் = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • அரைக்கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • குக்கரில் கீரை, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து மத்தினால் நன்கு கடையவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கடைந்து வைத்த கீரை கலவையை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “அரைக்கீரை குழம்பு” தயார். இதை சாதத்தோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • அரைக்கீரையில் தாதுக்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் மஞ்சள் காமாலை, புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
  • அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு பாதிப்பு குறையும். ஜலதோஷம், உடல் சூடு, சளி, சுரம், இருமல், பித்தம் ஆகியவற்றை குறைக்கும்.
  • கீரையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
  • பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும். இரத்த உற்பத்தி அதிகரிக்கும். பசியின்மை குறையும். கூந்தல் நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும். இளநரை வராமல் தடுக்கும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (12 votes cast)

தேவையான பொருள்கள்:
  1. இறால் மீன் = 250 கிராம்
  2. புதினா இலை = 1 கட்டு (சிறியது)
  3. கொத்தமல்லி இலை = அரை கட்டு (சிறியது)
  4. இஞ்சி = சிறிய துண்டு
  5. வெங்காயம் = 2
  6. பூண்டு = 5 பல்
  7. பச்சை மிளகாய் = 3
  8. மல்லி தூள் = அரை ஸ்பூன்
  9. சீரகத்தூள் = அரை ஸ்பூன்
  10. தேங்காய் பால் = 100 மி.லி
  11. எலுமிச்சை பழச்சாறு = 1 ஸ்பூன்
  12. உப்பு = தேவையான அளவு
  13. எண்ணெய் = தேவையான அளவு
செய்முறை:
  • புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
  • இறால் மீனை நன்றாக கழுவி தேவையான அளவு உப்பு, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து தடவி தனியாக ஊற வைத்து கொள்ளவும்.
  • பிறகு புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, ஒரு வெங்காயம், சீரகத்தூள் மற்றும் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை கலந்து கிளறி சிறிது நேரம் கொதிக்க வைத்து பிறகு தேங்காய் பால் ஊற்றி அடுப்பை குறைவாக வைத்து சிறிது நேரத்திற்கு கொதிக்க விடவும்.
  • பிறகு ஊற வைத்த இறாலை சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறால் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “புதினா இறால் குழம்பு” தயார். இதை அனைத்து விதமான சாதத்தோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம்,  பரோட்டா மற்றும் பூரி போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  • இறாலில் அதிக அளவில் புரதம், கொழுப்பு காணப்படுகிறது. கலோரி, இரும்பு, அயோடின், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் “E ” மற்றும் வைட்டமின் “B12″ ஆகியவை அதிக அளவில் காணப்படுகிறது.
  • கால்சியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை குறைந்த அளவில் காணப்படுகிறது. இது பற்கள், எலும்புகள் மற்றும் தோல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (3 votes cast)

தேவையான பொருள்கள்:
  1. பச்சை பருப்பு = அரை கப்
  2. வெல்லம் = தேவைக்கேற்ப‌
  3. திராட்சை = சிறிதளவு
  4. முந்திரி = சிறிதளவு
  5. பால் = அரை கப்
  6. ஏலக்காய் = 1
  7. குங்குமப்பூ = 10 இதழ்கள்
  8. நெய் = தேவையான அளவு
செய்முறை:
  • பச்சை பருப்பை வறுத்து பிறகு நன்றாக கழுவி கொள்ளவும். ஏலக்காயை இடித்து வைத்து கொள்ளவும். வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும். நன்றாக வெந்ததும் கரண்டியால் மசித்து கொள்ளவும்.
  • பிறகு இதில் வெல்லத்தை போட்டு சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து பாலை ஊற்றி கொதித்ததும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.
  • பிறகு வாணலியில் நெய் விட்டு திராட்சை, முந்திரியை பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.
சுவையான, ஆரோக்கியமான பருப்பு பாயசம் தயார்.

மருத்துவ குணங்கள்:
  • பச்சை பருப்பில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், ஸ்டார்ச், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • தாதுப்பொருள், நார்ச்சத்து நிறைந்துள்ளது. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. சருமத்தை பாதுகாக்கிறது. செரிமானத்திற்குகும் எளிதாக உள்ளது.
  • உடல் வெப்பத்தை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குறைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு.
VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (11 votes cast)

Page 1 of 11

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers