17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: April 2013

Page 1 of 212
தேவையான பொருள்கள்:
  1. வாழைப்பூ = 1
  2. சின்ன வெங்காயம் = 6
  3. தேங்காய் பால் = 1 கப்
  4. சீரகம் = 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் = சிறிதளவு
  6. மிளகாய் தூள் = தேவைக்கேற்ப‌
  7. புளி = சிறிய உருண்டை
  8. எண்ணெய் = தேவையான அளவு
  9. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.
  • புளியை கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம் போட்டு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • நன்றாக கொதித்ததும் வேக வைத்த வாழைப்பூ மற்றும் தேங்காய் பால் கலந்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
சூடான, ஆரோக்கியமான வாழைப்பூ குழம்பு தயார். இதை சாதம், சப்பாத்தி, இட்லி மற்றும் தோசை ஆகியவற்றோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • வாழைப்பூ குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது.
  • பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும். ஆண்களுக்கு விந்துவை விருத்தி செய்யும்.
  • வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால்  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.
  • இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
  • மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். உடல் எடை குறையும்.  எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.6/5 (8 votes cast)

தேவையான பொருள்கள்:
  1. சோம்புக்கீரை = 1 கட்டு
  2. கடலை பருப்பு = 1 கப்
  3. சின்ன வெங்காயம் = 10
  4. இஞ்சி = 1 துண்டு
  5. பச்சை மிளகாய் = 2
  6. பெருஞ்சீரகம் = சிறிதளவு
  7. பூண்டு = 2 பல்
  8. பெருங்காயம் = சிறிதளவு
  9. கறிவேப்பிலை = சிறிதளவு
  10. கொத்தமல்லி இலை = சிறிதளவு
  11. எண்ணெய் = தேவையான அளவு
  12. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • சோம்புக்கீரையை தண்ணீரில் கழுவி நீரை வடித்து பொடியான நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடலைப்பருப்பை நன்றாக ஊற வைத்து ஊறியதும் சுத்தமாக கழுவி விட்டு அதனுடன் பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  • பிறகு இதனுடன் கீரை, வெங்காயம், பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை வடை போல தட்டி போட்டு பொன்னிறமாக எடுத்து பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான சோம்புக்கீரை வடை தயார். இந்த வடையை உங்களுக்கு பிடித்த  சட்னியோடு பரிமாற சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • சோம்பில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு மற்றும் குறைந்த அளவு கலோரிகள்  காணப்படுகிறது. நியாசின், ஃபைபர், கால்சியம், மாங்கனீசு, காப்பர், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் “சி” மற்றும் வைட்டமின் “ஏ”  காணப்படுகிறது.
  • இரத்தத்தில் காணப்படும் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. சோம்புக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமானம் சரியாக நடைபெறும்.
  • உணவை ஜீரணிக்க வைப்பதில் சிறந்தது சோம்புக்கீரை. பசியின்மையை குறைத்து பசியை தூண்டும்.
  • இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள், அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று பொருமல், கருப்பை கோளாறுகள் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  • மேலும் இரைப்பு, வறட்டு இருமல், குளிர் சுரம், ஈரல் கோளாறுகள் அனைத்தும் குறையும்.
இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (3 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. உருளைக்கிழங்கு = 2
  2. பாசிப்பருப்பு = 1 கப்
  3. வெங்காயம் = 1
  4. பச்சை மிளகாய் =2
  5. இஞ்சி = சிறிய துண்டு
  6. சீரகம் = 1ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் = 1 சிட்டிகை
  8. கொத்தமல்லி இலை = சிறிதளவு
  9. எண்ணெய்  =தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • இஞ்சியை துருவி வைத்து கொள்ளவும். கொத்தமல்லி இலையை நறுக்கி கொள்ளவும்.
  • பாசிப்பருப்பை நன்றாக ஊற வைத்து கழுவி அரைத்து வைத்து கொள்ளவும்.
  • அரைத்த பாசிப்பருப்பு, மசிந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பதமாக கலந்து சிறிய உருண்டையாக உருட்டி வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.

சுவையான “உருளைக்கிழங்கு போண்டா” தயார். இந்த உருளைக்கிழங்கு போண்டாவை மாலை நேரத்தில் புதினா சட்னி, தேங்காய் சட்னியோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • உருளைக்கிழங்குகளில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
  • உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

உடலுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (6 votes cast)

தேவையான பொருள்கள்:
  1. மீல்மேக்கர் = 1 கப்
  2. வெங்காயம் = 1
  3. தக்காளி = 3
  4. இஞ்சி = சிறிய துண்டு
  5. பூண்டு = 5 பல்
  6. சீரகம் = 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
  8. மிளகாய் தூள் = தேவையான அளவு
  9. கடுகு = அரை ஸ்பூன்
  10. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  11. பெருஞ்சீரகம் = 1 ஸ்பூன்
  12. தேங்காய் பால் = அரை கப்
  13. கொத்தமல்லி = சிறிதளவு
  14. கறிவேப்பிலை = சிறிதளவு
  15. எண்ணெய் = 2 ஸ்பூன்
  16. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • மீல்மேக்கரை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு 15 நிமிடம் வைத்திருந்து நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளவும்.
  • பிறகு கொதிக்கும் நீரில் தக்காளியை 2 நிமிடங்கள் போட்டு எடுத்து தோலுரித்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.
  • இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  • பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து  கிளறி பிறகு தக்காளி சேர்த்து கிளறவும்.
  • நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது மீல் மேக்கரை போட்டு வதக்கவும். தேங்காய் பால் ஊற்றி பொடித்து வைத்த சீரகத்தை போட்டு கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான “மீல்மேக்கர் குழம்பு” தயார். இதை சாதம், சப்பாத்தி, பூரி, ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றோடு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • மீல்மேக்கர் அதிக அளவு புரதச்சத்து மிக்கது. மீல்மேக்கரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், மார்பக புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
  • எலும்புகளுக்கு பலத்தை அதிகரிக்கிறது. கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக காணப்படுகிறது.
  • பற்களை பலப்படுத்தும். தினசரி உணவில் மீல்மேக்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.
  • குழந்தைகள் மற்றும் பெண்களுகள் சாப்பிட கூடிய ஆரோக்கியமான உணவு மீல்மேக்கர்.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (4 votes cast)

தேவையான பொருள்கள்:
  1. முலாம் பழம் = 1
  2. தர்பூசணி = பாதி
  3. ஆரஞ்சு பழச்சாறு = 1 ஸ்பூன்
  4. எலுமிச்சை பழச்சாறு = 2 ஸ்பூன்
  5. மிளகு = கால் ஸ்பூன்
  6. உப்பு = தேவையான அளவு
  7. கொத்தமல்லி இலை = சிறிதளவு
செய்முறை:
  • தர்பூசணி மற்றும் முலாம் பழம் இரண்டையும் தோல் சீவி, விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பழத்துண்டுகளை 5 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து கொள்ளவும்.
  • மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும். கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பாத்திரத்தில் எலுமிச்சை பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை அனைத்தையும் ஒன்றாக போட்டு கலந்து வெட்டி வைத்துள்ள பழங்களின் துண்டுகளை போட்டு கலந்து பரிமாறவும்.
கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியமான சாலட்.
மருத்துவ குணங்கள்:
  • முலாம் பழத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.  இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலில் அதிக சூடு குறையும்.
  • முலாம் பழத்தில் ஃபைபர் எனப்படும் நார்ச்சத்து உள்ளது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
  • மேலும் வைட்டமின் “சி” மற்றும் வைட்டமின் “ஏ” அதிகம் இருப்பதால் புற்று நோய், இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. பக்கவாதம் நோய் வராமல் தடுக்கிறது. செரியாமை, வாய்வு மற்றும் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள்  வராமல் தடுக்கும்.
  • இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிது.
  • மேலும் கர்ப்பமான பெண்கள் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான பழமாகும். பெண்கள் அதிகமாக சாப்பிட கூடிய பழமாகும். உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பழம்.

இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுளை சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (8 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. காளான் = ஒரு கப்
  2. சின்ன வெங்காயம் = 10
  3. தேங்காய் துண்டுகள் = 2
  4. சீரகம் = 1ஸ்பூன்
  5. மிளகு = 3 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
  7. தனியா தூள் = 2 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை = தேவையான அளவு
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • காளானை சிறியதாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய், சீரகம் மற்றும் மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய காளான், சின்ன வெங்காயம், அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்கவும்.
  • சிறிது வெந்ததும் மூடியை திறந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகும் வரை கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி வைத்து இறக்கவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான காளான் குழம்பு தயார். இதை சாதத்தோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • காளானில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நீர் மற்றும் ஃபைபர் காணப்படுகிறது.
  • நீரிழிவு உடையவர்கள் காளானை எடுத்து கொள்வதால் தொற்று நோய்கள், வீக்கம் போன்றவை குறைகிறது.
  • காளானில் இரும்பு, தாமிரம், பொட்டாசியம், செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது. நகங்கள், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.

VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (3 votes cast)

Page 1 of 212

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers