17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: March 2013

Page 1 of 212
தேவையான பொருள்கள்:
  1. சுக்கு = 1 துண்டு
  2. வெந்தயம் = 1ஸ்பூன்
  3. மிளகு = 2 ஸ்பூன்
  4. புளி = சிறிய உருண்டை
  5. சின்ன வெங்காயம் = சிறிதளவு
  6. தக்காளி = 1
  7. கடுகு = அரை ஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் = சிறிதளவு
  10. மிளகாய் தூள் = அரை ஸ்பூன்
  11. கறிவேப்பிலை = சிறிதளவு
  12. எண்ணெய் = தேவையான அளவு
  13. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டாக வெட்டி கொள்ளவும்.
  • சுக்கு, வெந்தயம், மிளகை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்து ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கி வதங்கியதும்  புளிக்கரைசலை ஊற்றி உப்பு , மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் போது பொடி செய்து வைத்த சுக்கு கலவையை சேர்த்து கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான, ஆரோக்கியமான சுக்கு குழம்பு தயார். இதை அனைத்து விதமான சாதத்திற்கும் பரிமாறலாம்.

சுக்கின் மருத்துவ குணங்கள்

  • சுக்கில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், செம்பு, மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், குரோமியம், கரோட்டீன், தையாமின், நியாசின் மற்றும் வைட்டமின் “சி” காணப்படுகிறது.
  • சுக்கு ஜலதோஷம், மலச்சிக்கல் வருவதை தடுக்கிறது. தலைவலியை குறைக்கும். வாய்வு கோளாறுகளை நீக்குகிறது.
  • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயிற்று வலியை குறைக்கிறது. செரித்தலுக்கு உதவுகிறது.
  • தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கிறது. உடல் உறுப்புகளை சுத்தம் செய்து கழிவுகளை அகற்றுகிறது. பசியை தூண்டுகிறது.
VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (5 votes cast)

சம அளவு ஆடாதோடை இலை, அதிமதுரம், தாளிசப்பத்திரி, திப்பிலி, ஏலக்காய், வால் மிளகு மற்றும் கடுக்காய் தோல் ஆகியவற்றை இடித்து பொடி செய்து வைத்து பயன்படுத்த வேண்டும்.

அறிகுறிகள்:

  • சளி.
  • உடல் வலி.
  • காய்ச்சல்.

தேவையான பொருள்கள்:

  1. ஆடாதோடை இலை.
  2. அதிமதுரம்.
  3. தாளிசப்பத்திரி.
  4. திப்பிலி.
  5. ஏலக்காய்.
  6. வால் மிளகு.
  7. கடுக்காய் தோல்.

செய்முறை:

சம அளவு ஆடாதோடை இலை, அதிமதுரம், தாளிசப்பத்திரி, திப்பிலி, ஏலக்காய், வால் மிளகு மற்றும் கடுக்காய் தோல் ஆகியவற்றை இடித்து பொடி செய்து வைத்து பயன்படுத்த வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

  • இந்த மூலிகையை காய்ச்சலின் போது 5 கிராம் அளவு எடுத்து 200 மி.லி நீர் விட்டு 50 மி.லி ஆக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி காலை, மாலை குடித்து வர வேண்டும்.

தீரும் நோய்கள்:

  • ச‌ளி சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும். அதிக சளியினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் அனைத்து விதமான வைரஸ் காய்ச்சலுக்கும் இந்த மூலிகை மிகச்சிறந்த மருந்தாகும்.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (2 votes cast)

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து  சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து  வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.

அறிகுறிகள்:

  • மூட்டு வீக்கம்.
  • மூட்டு வலி.

தேவையான பொருட்கள்:

  1. கஸ்தூரி மஞ்சள்.
  2. சாம்பிராணி.
  3. கடுகு.
  4. கற்பூரம்.

செய்முறை:
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து கொள்ள வேண்டும். அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (61 votes cast)

கொய்யாப்பழம், சப்போட்டா பழம் ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

அறிகுறிகள்:

  • உடல் பலவீனமாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

  1. கொய்யாப்பழம்.
  2. சப்போட்டா பழம்.
  3. தேன்.

செய்முறை: கொய்யாப்பழம், சப்போட்டா  பழம் ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (6 votes cast)

நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

அறிகுறிகள்:

  • மஞ்சள் நிறத்தில் வாந்தி.
  • தலைச்சுற்றல்.

தேவையான பொருட்கள்:

  1. கொய்யாப்பழம்.
  2. மிளகு.
  3. எலுமிச்சைப் பழச்சாறு.

செய்முறை:
நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு, எலுமிச்சைப்பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (44 votes cast)

கிராம்பு, வெற்றிலை, மிளகு ஆகியவற்றை மென்று சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் வயிற்று உப்புசம் குறையும்.

அறிகுறிகள்:
  • வயிறு உப்பிசமாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கிராம்பு, வெற்றிலை, மிளகு ஆகியவற்றை மென்று சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் வயிற்று உப்புசம் குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.4/5 (37 votes cast)

Page 1 of 212

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers