17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: January 2013

Page 1 of 212

தேவையான பொருள்கள்:

  1. தானிய கலவை = அரை கப்
  2. துவரம் பருப்பு = 1 கப்
  3. காய்கறி கலவை = 2 கப்
  4. தக்காளி = 2
  5. வெங்காயம் = 1
  6. சாம்பார் தூள் = 3 ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் = அரை ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் = சிறிதளவு
  9. புளி = சிறிய உருண்டை
  10. கடுகு = தாளிக்க தேவையான அளவு
  11. வெந்தயம் = தாளிக்க தேவையான அளவு
  12. உளுந்து = தாளிக்க தேவையான அளவு
  13. சீரகம் = தாளிக்க தேவையான அளவு
  14. கொத்தமல்லி இலை = சிறிதளவு
  15. கறிவேப்பிலை = சிறிதளவு
  16. எண்ணெய் = தேவையான அளவு
  17. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • தானியங்களை நன்றாக ஊற வைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கு கொள்ளவும்.  சாம்பாருக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்.
  • ஊற வைத்த தானியங்களுடன் துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். இவை நன்றாக வெந்ததும் அதில் நறுக்கிய காய்கறிகள், தக்காளி, வெங்காயம், சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
  • நன்றாக வெந்ததும் புளியை கரைத்து புளிக்கரைசலை ஊற்றவும். பிறகு பெருங்காய‌த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • பிறகு கடுகு, வெந்தயம், உளுந்து, சீரகம் மற்றும்  கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான “தானிய காய்கறி சாம்பார்” தயார். இதை அனைத்து விதமான சாதத்தோடும், சப்பாத்தி, தோசை, இட்லி போன்றவற்றோடும் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • தானியத்தில் வைட்டமின் B, வைட்டமின்  E மற்றும் தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.
  • இதனால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் நீரிழிவை குறைக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம், மலச்சிக்கல் மற்றும் மற்ற செரிமான கோளாறுகள், எடையை கட்டுப்படுத்துகிறது.

உடலுக்கு ஆரோக்கியமான, சுவை நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோயின்றி வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (17 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. மக்காச்சோளம் = 2 கப்
  2. தக்காளி = 1
  3. வெங்காயம் = 1
  4. மிளகுத்தூள் = 2 ஸ்பூன்
  5. எலுமிச்சை பழச்சாறு = 1 ஸ்பூன்
  6. கொத்தமல்லி இலை = சிறிதளவு
  7. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மக்காச்சோளத்தை பாதி அளவு வேக வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் வேக வைத்த சோளம் ஆகியவற்றை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு எலுமிச்சை பழச்சாறு மற்றும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

உடலுக்கு ஆரோக்கியமான, சத்து நிறைந்த “மக்காச்சோளம் சாலட்” தயார்.

மருத்துவ குணங்கள்:

  • மக்காச்சோளத்தில் குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், கோபால்ட், குரோமியம், காப்பர், புளூரின், இரும்பு, அயோடின், மாங்கனீசு, செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை காணப்படுகிறது.
  • மேலும் வைட்டமின் “ஏ”, வைட்டமின் “பி”, வைட்டமின் “சி”, வைட்டமின் “டி”, வைட்டமின் “கே” வைட்டமின் “பி6″, வைட்டமின் “பி12″ மற்றும் ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது.
  • சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் குறைக்கும் சக்தி வாய்ந்தது. உடல் பருமன், மூலநோய் மற்றும் நீரிழிவை குறைக்கும்.

இவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியாக நோயின்றி வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (5 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. வெற்றிலை = 6
  2. மிளகுத்தூள் = 2 ஸ்பூன்
  3. தோசை மாவு = 5 கப்
  4. எண்ணெய் = சிறிதளவு
  5. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • வெற்றிலைகளை நன்கு சுத்தம் செய்து காம்புகளை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கையால் நன்றாக பிசைந்து தோசை மாவுடன் சேர்த்து போட்டு நன்கு கலந்து தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தோசை மாவை ஊற்றி பிறகு தோசையை சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
  • இந்த தோசையை நன்கு கனமாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

சூடான வெற்றிலை மிளகு தோசை தயார். இதை அனைத்து விதமான சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான தோசை.

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

  • புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து, மற்றும் கலோரிகள் காணப்படுகிறது. மேலும் கால்சியம், கரோடின், நியாசின் மற்றும் வைட்டமின் “சி”, அமினோ அமிலங்கள், டையாஸ்டேஸ் ஆகியவை உள்ளது.
  • இது ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது. வாய்வு தொல்லைகளை குறைக்கும். விஷக்கடிக்கு உதவுகிறது.
  • சிறுநீர் பிரச்சனை, அதிக இரத்தப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். கண் வலி, வயிற்று வலி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் நரம்பு தளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.

இவ்வாறு உடலுக்கு சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.6/5 (11 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. பரங்கிக்காய் = 1 துண்டு
  2. தக்காளி = 1
  3. வெங்காயம் = 1
  4. பூண்டு = 3 பல்
  5. மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
  6. பால் =  அரை கப்
  7. எண்ணெய் = 3 ஸ்பூன்
  8. உப்பு = தேவையான அளவு
  9. கொத்தமல்லி = சிறிதளவு

செய்முறை:

  • பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள‌வும்.
  • பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

சூடான ஆரோக்கியமான “பரங்கிக்காய் சூப்” தயார்.

மருத்துவ குணங்கள்:

  • பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.
  • பரங்கிக்காய் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீர்ப்பை கோளாறுகள், வயிற்று கோளாறுகள், குடல் புழுக்கள், சிறுநீர் கோளாறுகள், வாத நோய், தீக்காயங்கள் மற்றும் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை குறைக்கும். இவை உடலுக்கு ஊட்டம் மற்றும் சக்தியை அளிக்கிறது.

உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (6 votes cast)

நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சதக்குப்பை விதை மற்றும் வசம்பு ஆகியவற்றை இடித்து பொடி செய்து தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். உடல் வலிமை பெறும்.

அறிகுறிகள்:

  • அஜீரண கோளாறு.
  • வயிற்று கோளாறுகள்.
  • பலவீனம்.
  • சோர்வு.

தேவையான பொருள்கள்:

  1. நிலவேம்பு.
  2. கோரைக்கிழங்கு.
  3. சதக்குப்பை விதை.
  4. வசம்பு.

செய்முறை:

  • நிலவேம்பை முழுச்செடியாக எடுத்து காய வைத்து 20 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
  • கோரைக்கிழங்கை இடித்து பொடி செய்து 20 கிராம் அளவு எடுத்து வைத்து கொள்ளவும்.
  • சதகுப்பை விதைகளை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளாவும்.
  • வசம்பை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளவும்.

இடித்து பொடி செய்த அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக கலந்து 200 மி.லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 50 மி.லி ஆக சுண்டியதும் எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வடிகட்டி காலை, இரவு குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். உடல் வலிமை பெறும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (15 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. கேரட் சாறு.
  2. ஆரஞ்சு பழச்சாறு.
  3. எலுமிச்சை பழச்சாறு.
  4. பன்னீர்.
  5. தயிர்.

செய்முறை:
சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (100 votes cast)

Page 1 of 212

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers