17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: December 2012

Page 1 of 512345

தேவையான பொருட்கள்:

  1. வெந்தயக்கீரை – 1 கப்
  2. பெரிய வெங்காயம் – 2
  3. தக்காளி – 2
  4. சோள மாவு – 1 டீஸ்பூன்
  5. பூண்டு – 2 பல்
  6. வெண்ணெய் – சிறிதளவு
  7. காய்ச்சிய பால் – 1/2 டம்ளர்
  8. மிளகுப்பொடி, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • வெந்தயக்கீரை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கவேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவேண்டும். நன்கு கொதிக்கும் போது வெந்தயக்கீரை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவேண்டும். காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சோக்கவேண்டும். எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி விடவேண்டும். உப்பு, மிளகுப்பொடி தேவையான சேர்க்கவேண்டும். இப்பொழுது சுவையான சத்தான வெந்தயக்கீரை சூப் தயார்.
  • சிறிதளவு சோளத்தை அரைத்து அந்த சூப்பில் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்.

மருத்துவப் பயன்கள்:

  1. வெந்தயக்கீரையில் வைட்டமின் எ, பி உயிர்ச்சத்துக்கள் காணப்படுகிறது. உடலிலுள்ள எலும்புப்பகுதிகளை உறுதியாக வைத்திருக்க பயன்படுகிறது.
  2. வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறைகிறது.
  3. இருமல், கபம், சளி ஆகிய நோய்களை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது
  4. வெந்தயக்கீரை மந்தமாக காணப்படுவர்களை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
  5. அஜீரணத்தை வெந்தயக்கீரை குறையச் செய்கிறது.
  6. வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, வயிறு உப்பீசமாக காணப்படுதல் போன்ற வயிற்று கோளாறுகளை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது.
VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (19 votes cast)

புதினாவை சுத்தம் செய்து  காயவைத்து இடித்து பொடி செய்துக்கொள்ள வேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.


அறிகுறிகள்:

  • உடல் பலவீனமாக காணப்படுதல்.
  • நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு.

தேவையான பொருட்கள்:

  1. புதினா.
  2. பனங்கற்கண்டு.

செய்முறை:
புதினாவை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.4/5 (37 votes cast)

சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து  ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து  காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

அறிகுறிகள்:

  • சர்க்கரை நோய்.

தேவயான பொருட்கள்:

  1. சிறியா நங்கை இலை பொடி
  2. நெல்லி முள்ளி பொடி.
  3. நாவல் கொட்டை பொடி.
  4. வெந்தயப் பொடி.
  5. சிறு குறிஞ்சான் இலை பொடி

செய்முறை:
சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து  ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து  காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (36 votes cast)

தேவையான பொருட்கள்:

  1. மாங்காய் – 1 பெரியது
  2. நெல்லிக்காய் – 200 கிராம்
  3. மிளகாய்தூள் – 200 கிராம்
  4. உப்பு – 11/2 டீஸ்பூன்
  5. பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
  6. கடுகு – டீஸ்பூன்
  7. வெல்லம்- சிறிதளவு

செய்முறை:

  • மாங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, அரைத்த விழுதைப் போடவேண்டும்.
  • மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்க வேண்டும்.  இப்பொழுது சுவையான மாங்காய் நெல்லிக்காய் தொக்கு தயார்.

மருத்துவ பயன்கள்:

  1. நெல்லிக்காய் இதயத்தை வலிமைப்படுத்தும்.
  2. நெல்லிக்காய் குடல்புண், கண்நோய்கள், இரத்தப்பெருக்கு, நீரழிவு நோய் ஆகியவற்றை குறையச் செய்யும்.
  3. நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, தாதுப் பொருள், இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
  4. மாம்பிஞ்சுகளை வெயிலில் காயவைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.7/5 (6 votes cast)

கீழாநெல்லி இலை கைப்பிடியளவு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து அதில் சிறிதளவு பால் கலந்து அரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அரைத்த விழுதை ஒரு கப் பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.

அறிகுறிகள்:

  • மஞ்சள் காமாலை.
  • கண் மஞ்சள் நிறமாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

  1. கீழாநெல்லி இலை.
  2. கருஞ்சீரகம்.
  3. பால்.

செய்முறை:
கீழாநெல்லி இலை கைப்பிடியளவு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து அதில் சிறிதளவு பால் கலந்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த விழுதை ஒரு கப் பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (25 votes cast)

கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி ஆகியவற்றை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.

அறிகுறிகள்:

  • அஜீரணம்.
  • வயிறு உப்பீசமாக காணப்படுதல்.
  • பசியின்மை.

தேவையான பொருட்கள்:

  1. கருஞ்சீரகப்பொடி.
  2. மல்லிப்பொடி.
  3. பால்.

செய்முறை:
கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.6/5 (10 votes cast)

Page 1 of 512345

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers