17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: November 2012

Page 1 of 3123

மாவிலையை இடித்துச் சாறு எடுத்து அதே அளவு தேன், பால், பசும் நெய் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் குரல் வளம் பெறும்.


அறிகுறிகள்:

  • குரல் கரகரப்பாக காணப்படுதல்.
  • மெதுவாக பேசுதல்.
  • தெளிவற்ற பேச்சு.

தேவையான பொருட்கள்:

  1. மாவிலை சாறு.
  2. தேன்.
  3. பால்.
  4. பசு நெய்.

செய்முறை:
மாவிலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். மாவிலை சாற்றுடன் அதே அளவு தேன், பால், பசும் நெய் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் குரல் வளம் பெறும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (33 votes cast)

மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

அறிகுறிகள்:

  • தலைவலி.

தேவையான பொருட்கள்:

  1. மகிழம்பூ
  2. சுக்கு.
  3. சீரகம்.
  4. சோம்பு.
  5. ரோஜாப்பூ.
  6. ஏலக்காய்.
  7. அதிமதுரம்.
  8. சித்தரத்தை
  9. தேன்.

செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (22 votes cast)


தேவையான பொருட்கள்:

  1. கொத்தமல்லி.
  2. மஞ்சள்.

செய்முறை:
கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (52 votes cast)

மகிழம்பூ, ரோஜப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறையும்.

அறிகுறிகள்:

  • மன அழுத்தம்.

தேவையான பொருட்கள்:

  1. மகிழம்பூ
  2. ரோஜாப்பூ.
  3. தாமரைப்பூ.
  4. தண்ணீர்விட்டான் கிழங்கு.
  5. சுக்கு.
  6. ஏலக்காய்.

செய்முறை:
மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, ஏலக்காய் ஆகியவை வகைக்கு 100 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன் சுக்கு, ஏலக்காய் ஆகியவை வகைக்கு  10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாகச் சோ்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (3 votes cast)

மகிழம்பூ, பாசிப்பயறு ஆகியவைகள் ஒரு கைப் பிடியளவு எடுத்து அதனுடன் மூன்று வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடம்பில் பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் வேர்க்குரு குறையும்.


அறிகுறிகள்:

  • வேர்க்குரு.
  • அரிப்பு.

தேவையான பொருட்கள்:

  1. மகிழம்பூ
  2. பாசிப் பயறு.
  3. வேப்பிலை.
  4. மஞ்சள்.

செய்முறை:
மகிழம்பூ, பாசிப்பயறு ஆகியவைகள் ஒரு கைப் பிடியளவு எடுத்து அதனுடன் மூன்று வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடம்பில் பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் வேர்க்குரு குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (2 votes cast)

தேவையான பொருட்கள்:

  1. பயத்தம் பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
  2. தயிர்- 1/2 கப்
  3. பச்சை மிளகாய்- 5 அல்லது 6
  4. பூண்டு – 3 அல்லது 4 பல்
  5. உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • பயத்தம் பருப்பை எடுத்து தண்ணீர் விட்டு ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஊறவைக்கவேண்டும். நன்கு ஊறியதும் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றுடன் தண்ணீர் சோ்த்து மிருதுவாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அரைத்த மாவில் உப்பு, தயிர் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவை தோசை தவாவில் ஊற்றி தேசைகளை வார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான பயித்தம் பருப்பு தோசை ரெடி. தோசையுடன் தேங்காய் சட்னி சேர்த்து சூடாக பரிமாறலாம்.

குறிப்பு:

  • மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு கரண்டி அரிசி மாவு சேர்த்து பயன் படுத்தலாம். மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும். கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும். தயிரை கடைந்த பின்பு மாவில் சேர்த்தால் கட்டி ஏற்படாது. தேவையான அளவு தயிர் மட்டு சேர்க்கவேண்டும். தயிர் சேர்த்தால் தோசை மென்மையாக இருக்கும். தயிர் அதிகமாக சேர்த்தால் புளித்துவிடும்.

மருத்துவக் குணங்கள்:

  1. பயறு பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது.
  2. பயறு இரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறையச் செய்யும்.
  3. பயறு இரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேற்றுகிறது.
  4. இரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை பயறு குறைய செய்கிறது.
  5. பயறு சிறுநீரை தேவையான அளவு பெருகவும், வெளியேறவும் பயன்படுகிறது.
  6. கபமோ, பித்தமோ அதிகமாக ஏற்படாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்க பயறு பயன்படுகிறது.
VN:F [1.9.22_1171]
Rating: 4.1/5 (12 votes cast)

Page 1 of 3123

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers