17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: August 2012

Page 1 of 1712345...10...Last »

அவுரி இலை, அல்லி இலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரிசி கழுவிய தண்ணீரை விட்டு அரைத்து கட்டிகள் மீது பூசி வந்தால் உடலில் காணப்படும் வேனல் கட்டிகள் குறையும்.


அறிகுறிகள்:

  • வேனல் கட்டிகள்.

தேவையான பொருட்கள்:

  1. அவுரி இலை.
  2. அல்லி இலை.
  3. அரிசி கழுவிய தண்ணீர்.

செய்முறை:
அவுரி இலை, அல்லி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரிசி கழுவிய தண்ணீரை விட்டு நன்கு அரைத்து கட்டிகள் மீது பூசி வந்தால் உடலில் காணப்படும் வேனல் கட்டிகள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.7/5 (3 votes cast)

இண்டு வேர், தூதுவளை வேர், சுக்கு, திப்பிலி, வெந்தயம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு சுண்டக்காய்ச்சி தினசரி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

அறிகுறிகள்:

  • இருமல்.
  • சளி.

தேவையான பொருட்கள்:

  1. இண்டு வேர்
  2. தூதுவளை வேர்.
  3. சுக்கு.
  4. திப்பிலி.

செய்முறை
இண்டு வேர், தூதுவளை வேர், சுக்கு, திப்பிலி, வெந்தயம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு  சுண்டக்காய்ச்சி தினசரி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.4/5 (19 votes cast)

திப்பிலி, கடுகுரோகிணி, ஏலக்காய், சீரகம், கிராம்பு ஆகியவற்றை வறுத்து இடித்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவேண்டும். இதனுடன் மயிலிறகு சாம்பலையும் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை ஐந்து கிராம் எடுத்து தேனில் குழைத்து தினசரி சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

அறிகுறிகள்:

  • விக்கல்.

தேவையான பொருட்கள்:

  1. திப்பிலி.
  2. கடுகுரோகிணி
  3. சீரகம்.
  4. கிராம்பு.
  5. மயிலிறகுச் சாம்பல்.
  6. தேன்.

செய்முறை:
திப்பிலி, கடுகுரோகிணி, ஏலக்காய், சீரகம், கிராம்பு ஆகியவற்றை வறுத்து இடித்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவேண்டும். இதனுடன் மயிலிறகு சுட்ட சாம்பலையும் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை ஐந்த கிராம் எடுத்து தேனில் குழைத்து தினசரி சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.1/5 (7 votes cast)

நொச்சி ஈர்க்கு, நுணா ஈர்க்கு, வேப்பம் ஈர்க்கு, மாவிலை ஈர்க்கு, புளியம் ஈர்க்கு, உத்தாமணி இலை, பொடுதலை, வில்வ இலை, பெரும்தும்பை இலை, சதாப்பு இலை ஆகியவைகளை நறுக்கி இரண்டு படி தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். பின்பு பூண்டு, திப்பிலி, மிளகு, வசம்பு ஆகியவற்றை சுடு தண்ணீர் விட்டு அரைத்து காய்ச்சிய மூலிகைகளுடன் கலந்து விடவேண்டும். இவற்றை கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை காலை, மாலை என இருவேளை ஒரு சங்கு வீதம் மூன்று நாட்கள் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குறையும்.

அறிகுறிகள்:

  • வயிறு பொருமல்.
  • நுரையாக மலம் வெளியேறுதல்.

தேவையான பொருட்கள்:

  1. நொச்சி ஈர்க்கு.
  2. நுணா ஈர்க்கு.
  3. வேப்பம் ஈர்க்கு.
  4. மாவிலை ஈர்க்கு.
  5. புளியம் ஈர்க்கு.
  6. உத்தாமணி இலை.
  7. பொடுதலை.
  8. வில்வ இலை.
  9. பெரும்தும்பை இலை.
  10. சதாப்பு இலை
  11. பூண்டு.
  12. திப்பிலி.
  13. மிளகு.
  14. வசம்பு.

செய்முறை:
நொச்சி ஈர்க்கு, நுணா ஈர்க்கு, வேப்பம் ஈர்க்கு, மாவிலை ஈர்க்கு, புளியம் ஈர்க்கு, உத்தாமணி இலை, பொடுதலை, வில்வ இலை, பெரும்தும்பை இலை, சதாப்பு இலை ஆகியவைகளை நறுக்கி இரண்டு படி தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். பின்பு பூண்டு, திப்பிலி, மிளகு, வசம்பு ஆகியவற்றை சுடு தண்ணீர் விட்டு அரைத்து காய்ச்சிய மூலிகைகளுடன் கலந்து விடவேண்டும். இவற்றை கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை காலை, மாலை என இருவேளை ஒரு சங்கு வீதம் மூன்று நாட்கள் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.0/5 (3 votes cast)

திராட்சைப் பழம், பற்பாடகம், கடுகுரோகிணி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், கொன்றைப் பட்டை ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டாக் காய்ச்சிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி மூன்று வேளை சாப்பிடக் கொடுத்து வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.

அறிகுறிகள்:

  • பித்தம் அதிகமாவதால் ஏற்படும் காய்ச்சல்.
  • வாந்தி மஞ்சள் நிறமாக காணப்படுதல்.
  • தலைச்சுற்றல்.
  • வயிற்றுப்போக்கு.

தேவையான பொருட்கள்:

  1. திராட்சைப் பழம்.
  2. பற்பாடகம்.
  3. கடுகுரோகிணி
  4. கோரைக் கிழங்கு.
  5. கடுக்காய் தோல்
  6. கொன்றைப் பட்டை.

செய்முறை:
திராட்சைப் பழம், பற்பாடகம், கடுகுரோகிணி, கோரைக் கிழங்கு, கடுக்காய் தோல், கொன்றைப் பட்டை ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டாக் காய்ச்சிக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி மூன்று வேளை சாப்பிடக் கொடுத்து வந்தால் பித்தக் காய்ச்சல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.4/5 (5 votes cast)

அன்னாசிப் பழம் ஒன்றை எடுத்து தோல் நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கி அதனுடன் ஓமத்தை பொடி செயது போட்டு நன்றாகக் கிளறி அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். அதை இரவில் வைத்திருந்து மறுநாள் காலையில் பிழிந்துச் சாறு எடுத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு பத்து நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் பருத்த வயிறு குறையும்.

அறிகுறிகள்:

  • வயிறு பருத்து காணப்படுதல் (தொப்பை).

தேவையான பொருட்கள்:

  1. அன்னாசிப் பழம்.
  2. ஓமம்.

செய்முறை:
அன்னாசிப் பழம் ஒன்றை எடுத்து தோல் நீக்கி சிறுத்துண்டுகளாக நறுககிக் கொள்ளவேண்டும். அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமமத்தை எடுத்து பொடி செய்து போட்டு நன்குக் கிளறி விட்டு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும. அதை இரவில் வைத்திருந்து மறுநாள் காலையில் பிழிந்துச் சாறு எடுத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு பத்து நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் பருத்த வயிறு குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.7/5 (6 votes cast)

Page 1 of 1712345...10...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers