17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: July 2012

Page 1 of 1712345...10...Last »

மான் செவிக் கள்ளி செடியின் இலையை எடுத்து கழுவி சுத்தம் செய்து வேப்ப எண்ணெய் தடவி சிறிது தணலில் வாட்டிக் கட்டி வந்தால் தொடை வாழைக் கட்டி குறையும்.


அறிகுறிகள்:

  • தொடை வாழைக் கட்டி.
  • நடப்பதற்கு சிரமம் ஏற்படும்.

தேவையான பொருட்கள்:

  1. மான் செவிக் கள்ளி இலை
  2. வேப்ப எண்ணெய்.

செய்முறை:
மான் செவிக் கள்ளி செடியின் இலையை எடுத்து கழுவி சுத்தம் செய்து, அந்த இலையில் வேப்ப எண்ணெயை தடவி சிறிது தணலில் வாட்டிக் கட்டி வந்தால் தொடை வாழைக் கட்டி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (3 votes cast)

வல்லாரை சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலையை சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.

அறிகுறிகள்:

  • தொண்டை கரகரப்பு.

தேவையான பொருட்கள்:

  1. வல்லாரை சாறு.
  2. அரிசித்திப்பிலி.

செய்முறை:
வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலியை சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (12 votes cast)

மூக்கிரட்டை வேரை கைப்பிடியளவு எடுத்து நன்கு நைத்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால்லிட்டராக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.

தேவையான பொருட்கள்:

  1. மூக்கிரட்டை வேர்.

செய்முறை:
மூக்கிரட்டை வேரை கைப்பிடியளவு எடுத்து நன்கு நைத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால்லிட்டராக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.8/5 (10 votes cast)

கருஞ்சீரகத்தை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து பித்தப் பையில் வலி ஏற்படும் போது சாப்பிட்டு வந்தால் பித்தப் பை வலி குறையும்.


அறிகுறிகள்:

  • பித்தப் பையில் வலி.

தேவையான பொருட்கள்:

  1. கருஞ்சீரகம்.

செய்முறை:
கருஞ்சீரகம் ஆறு கிராம் எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து பித்தப் பையில் வலி ஏற்படும் போது சாப்பிட்டு வந்தால் பித்தப் பை வலி குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

மூன்று வெற்றிலையை எடுத்து ஒவ்வொன்றிலும் மூன்று மிளகுகள் வீதம் வைத்து வெற்றிலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் வண்டுக் கடித்த விஷம் குறையும்.

அறிகுறிகள்:

  • உடலில் தடுப்பு ஏற்படுதல்.
  • அரிப்பு ஏற்படுதல்.
  • உடல் வீக்கம்.

தேவையான பொருட்கள்:

  1. வெற்றிலை.
  2. மிளகு.

செய்முறை:
மூன்று வெற்றிலையை எடுத்து அதன் ஒவ்வொன்றிலும் மூன்று மிளகுகள் வீதம் வைத்து வெற்றிலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் வண்டுக் கடித்த விஷம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.7/5 (6 votes cast)

பூவரசமர வேர், பட்டை இரண்டையும் இடித்து  கஷாயம் செய்து கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குறையும்.

அறிகுறிகள்:

  • தொண்டை வலி.
  • தொண்டை கரகரப்பு.
  • தொண்டையில் ஏற்படும் புண்.

தேவையான பொருட்கள்:

  1. பூவரசமர வேர், பட்டை.

செய்முறை:
பூவரசமர வேர், பட்டை இரண்டையும் இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (11 votes cast)

Page 1 of 1712345...10...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers