17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: January 2012

Page 1 of 5712345...102030...Last »

10 செண்பகப்பூவை 100 மி.லி நீர்விட்டு காய்ச்சி 50 மி.லி காலை, மாலை ஆகிய இருவேளை குடித்துவந்தால்  மேக நோய்கள் குறையும்.


அறிகுறிகள்:

  • மேக நோய்

தேவையான பொருட்டுகள்:

  1. செண்பகப்பூ

செய்முறை:
10 செண்பகப் பூவை எடுத்து அதில் 100 மி.லி தண்ணீர் விட்டு காய்ச்சி  50 மி.லியாகச் சுண்ட வைத்து காலை, மாலை என இரண்டு வேளைச் சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (3 votes cast)

சாதாரண காய்ச்சலுக்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கை அளவு மிளகை போட்டு வறுத்து பிறகு மத்தினால் கடைந்து விட்டு வற்ற வைத்து வடிகட்டி சிறிது சர்க்கரை கலந்து காலை, மாலை குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

அறிகுறிகள்:

  • காய்ச்சல்.

தேவையான பொருள்கள்:

  1. மிளகு.
  2. சர்க்கரை.

செய்முறை:
சாதாரண காய்ச்சலுக்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கை அளவு மிளகை போட்டு வறுத்து பிறகு மத்தினால் கடைந்து விட்டு 4 ஆழாக்கு தண்ணீர் விட்டு அதை 2 அழாக்காக வற்ற வைத்து வடிகட்டி சிறிது சர்க்கரை கலந்து காலையில் அரை ஆழாக்கும், மாலையில் அரை ஆழாக்கும் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

சீதக் கழிச்சல்
சாதாரணமான வயிற்றுக்கடுப்பு போன்ற குறிகளுடன் வேறு சில குறிகளும் சேர்ந்து குடல் அழற்சி ஏற்பட்டு சீதம் மலத்துடன் வெளியேறுகிறது. குடலில் அழற்சியையும், புண்ணயும் உண்டாக்கி விடும். இது தீவிர நிலையைக் குறிக்கும். சில ஒவ்வாமைப் பொருட்களாலும், சில கிருமிகளினாலும் இந்நோய் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
குறி குணங்கள்:
சீதக் கழிச்சல் நோய் உள்ளவர்கள், மலம் கழிக்கும்போது, அத்துடன் சளி, ரத்தம், மற்றும் சீழ் போன்றவை சேர்த்து வரும். சில சமயங்களில் உதிரம் கட்டி கட்டியாக விழுவது உண்டு. அல்லது ரத்தம் மலத்துடன் கலந்து கடுப்பாக மலம் கழியும். இவற்றால் எடை குறைவு, வயிற்றுப் போக்கு ஏற்படும். உண்ட உணவு செரிக்காமல் வெளியேறுதல், எரிச்சல் போன்றவை ஏற்படும்.

மருந்து 1


தேவையான பொருட்கள்:

  1. படிகாரம் -50 கிராம்
  2. பூங்காவி (நயம்)-50 கிராம்
  3. பால்.
  4. வெண்ணெய்.

செய்முறை:
படிகாரத்தைப் பொடித்து, நன்றாக வறுத்துக் கொள்ளவும், காவிக் கல்லை சிறிது நேரம் பாலில் ஊற வைத்து, பால் முழுவதையும் வடிகட்டி, வெயிலில் நன்றாகக் காய வைத்து இரண்டையும்  ஒன்று கலந்து அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
ஒருவேளைக்கு 1/2 டீஸ்பூன் அளவு, ஒருநாளைக்கு  இரண்டு  வேளை உருக்கிய நெய் அல்லது வெண்ணெயில்  சாப்பிட்டு வந்தால்  சீதக் கடுப்பு, இரத்தம் விழுதல் ஆகியவற்றால் ஏற்படும் குடற்புண்கள் குறையும்.
**********************************************
மருந்து 2
தேவையான பொருட்கள்:

  1. காசுக்கட்டி -10 கிராம்
  2. வெண்ணெய்.

உபயோகிக்கும் முறை:
நன்றாகப் பொடித்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து வெண்ணெயுடன் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சீதக்கழிச்சல் மற்றும் குடற்புண் குறையும்.
**********************************************
மருந்து 3
தேவையான பொருட்கள்:

  1. மாசிக்காய் – 20 கிராம்

உபயோகிக்கும் முறை:
மாசிக்காயை நன்றாக வறுத்து, வெடிக்கும் பக்குவத்தில் எடுத்து, பட்டு போல் நுணுக்கி, வஸ்திர காயம் செய்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து வெண்ணெயுடன் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சீதக்கடுப்பு குறையும்.
************************************************
மருந்து 4
தேவையான பொருட்கள்:

  1. கடுக்காய் தோல்-50 கிராம்

உபயோகிக்கும் முறை:
கடுக்காய் தோலை  நன்றாகப் பொடி செய்து மெல்லிய சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக்கொண்டு 2,3 சிட்டிகை அளவு  வெண்ணெய் அல்லது நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதக் கழிச்சல் குறையும்.
**************************************

VN:F [1.9.22_1171]
Rating: 4.3/5 (8 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. வெள்ளரிக்காய்.

செய்முறை:
வெள்ளரிக்காயை  நன்கு மைய அரைத்து  கரும்புள்ளிகள் மீது தடவி வைத்து நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (4 votes cast)

பழுத்த மாம்பழச்சாற்றை சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிக தாகம் குறையும்.

அறிகுறிகள் :

  • அதிக தாகம்.
  • பித்த மயக்கம்.

தேவையானப் பொருட்கள்:

  1. பழுத்த மாம்பழம்.

செய்முறை :

பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து சிறிது சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிக தாகம், பித்த மயக்கம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (6 votes cast)

தேவையான பொருட்கள்:

  1. கோதுமை மாவு -200 கிராம்
  2. காரட் – 200 கிராம்
  3. கறிவேப்பிலை-சிறிதளவு
  4. மல்லிதழை-சிறிதளவு
  5. பீட்ரூட் – 100 கிராம்
  6. வெங்காயம்-200 கிராம்
  7. உப்பு – சிறிதளவு
  8. கறிமசால்-சிறிதளவு
  9. மிளகாய்தூள்-சிறிதளவு

செய்முறை:

  • காரட், பீட்ரூட் இரண்டையும் துறுவி வைத்துக் கொள்ளவேண்டும்.
  • கோதுமை மாவில் துறுவிய காரட், பீ்ட்ருட், உப்பு, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்க்கவேண்டும்.
  • தேவைக்கேற்ப கறிமசால், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை ஆகியவற்றை போட்டு,   சாப்பாத்தி மாவு போல் நைசாக பிசைந்து வைத்துக் கொள்ளவேண்டும். 30 நிமிடம் கழித்து  ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டுச் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

காரட், பீட்ரூட்டின் மருத்துவக் குணங்கள்:

  1. இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
  2. வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது
  3. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
  4. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (2 votes cast)

Page 1 of 5712345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers