17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: December 2011

Page 1 of 3912345...102030...Last »

தேவையான பொருள்கள்:

  1. பயத்தம் பருப்பு = 2 கரண்டி
  2. இஞ்சி = காலங்குலம்
  3. பச்சை மிளகாய் = 2
  4. தக்காளி = 2
  5. மிளகு = 1 ஸ்பூன்
  6. சீரகம் = 1 ஸ்பூன்
  7. தனியா = 1 ஸ்பூன்
  8. புளி = அரை எலுமிச்சை அளவு
  9. பெருங்காயம் = சிறிதளவு
  10. கடுகு = 1 ஸ்பூன்
  11. எண்ணெய் = 2 ஸ்பூன்
  12. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • பயத்தம் பருப்பை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். தக்காளி நறுக்கவும்.
  • மிளகு, சீரகம் உடைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டவும். தனியாவை எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
  • எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து தக்காளி வதக்கிக் கொண்டு புளித் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். மிளகு, சீரகம் சேர்க்கவும்.
  • கொதிக்கத் துவங்கும் போது ஊறிய பயத்தம் பருப்பு வறுத்த தனியா, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான மங்களுர் ரசம்  தயார்.

மருத்துவ குணங்கள்:

  • பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.
VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (5 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. பேபி உருளைக்கிழங்கு = அரை கிலோ
  2. மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
  3. மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
  4. சீரகப்பொடி = 1 ஸ்பூன்
  5. இஞ்சி = அரையங்குலம்
  6. பூண்டு = 10 பல்
  7. சின்ன வெங்காயம் = அரை கப்
  8. சாட் மசாலா = 2 டேபிள் ஸ்பூன்
  9. கரம் மசாலா = 2 ஸ்பூன்
  10. வெங்காயத்தாள் = 1 கப்
  11. பனீர் = 25 கிராம்
  12. எண்ணெய் = தேவையான அளவு
  13. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • உருளைக்கிழங்கை மஞ்சள் பொடி சேர்த்து வேக விட்டு உரித்துக் கொள்ளவும். அதனோடு தேவையான அளவு உப்பு, மிளகாய் பொடி, சீரகப்பொடி சேர்க்கவும்.
  • சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டை உரித்து சதசதப்பாக அரைத்து சேர்க்கவும். இதை எண்ணெய் தேவையான அளவு சேர்த்து வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து கிளறவும். சிறிது தண்ணீர் தெளித்தால் மட்டும் போதும்.
  • நன்றாக சிவக்கும் வரை கை விடாது கிளறவும். 5 நிமிடம் கழித்து சாட் மசாலாவையும் சேர்த்து தேவையானால் மேலும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
  • பனீரை பொடியாக நறுக்கவும்.வெங்காயத்தாளை ஓரங்குல துண்டுகளாக ஒரு கப் அளவிற்கு நறுக்கவும். நன்றாக கிழங்கு வதங்கியதும் இவற்றை சேர்க்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு ஃபிரை ரோஸ்ட் தயார். இதை எல்லா விதமான ரைஸிற்கும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் ரைஸ், சப்பாத்தி ஆகியவற்றோடு பரிமாற மிகவும் பொருத்தமாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • உருளைக்கிழங்குகளில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
  • உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (3 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. வாழைக்காய் = 2
  2. மீல்மேக்கர் = 100 கிராம்
  3. பச்சை மொச்சை = 100 கிராம்
  4. பச்சை மிளகாய் = 5
  5. இஞ்சி = காலங்குலம்
  6. பூண்டு = 10 பல்
  7. தேங்காய் = அரை மூடி
  8. தனியா பொடி = அரை ஸ்பூன்
  9. தக்காளி = 2
  10. தயிர் = அரை கப்
  11. மிளகாய் வற்றல் = 2
  12. புதினா = அரை கட்டு
  13. பட்டை = 2
  14. கிராம்பு = 2
  15. பிரிஞ்சி இலை = 1
  16. ஜாதிக்காய் பொடி = 1 சிட்டிகை
  17. எண்ணெய் = அரை கரண்டி
  18. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • வாழைக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கர் அளவிற்கு நறுக்கினால் சரியாக இருக்கும். மீல்மேக்கரை சிறிது நேரம் ஊற விட்டுப் பின் அலசிப் பிழியவும். பச்சை மொச்சையை உரித்து கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், பச்சை மிளகாய், தக்காளி அரைத்து கொள்ளவும். புதினாவை ஆய்ந்து கொள்ளவும்.
  • வாணலியில் பாதி எண்ணெய் விட்டு முதலில் ஊறவிட்டுப் பிழிந்து வைத்திருக்கும் மீல்மேக்கரை பொரித்து எடுக்கவும். இதை எடுத்து விட்ட பின் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  • இதை வதக்கிய பின் அரைத்த தேங்காய் மசாலாவைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து தனியா பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு வாழைக்காய், மொச்சை பருப்பு, பொரித்த மீல்மேக்கர் சேர்த்து வதக்கி அரை கப் நீர் விட்டு மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும். இடையில் ஓரிரு முறை கிளறி இறக்கவும்.
  • பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, மிளகாய் வற்றல் தாளித்து கொட்டவும்.

சுவையான வாழைக்காய் மீல்மேக்கர் கூட்டு  தயார். இதை ரைஸ், பூரி, ரோல்ஸ், சமோசா சப்பாத்தி, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாற‌லாம்.

மருத்துவ குணங்கள்:

  • வாழைக்காய் குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறையும்.
  • உடல் எடை, இரத்த அழுத்தம், இரத்த சோகை ஆகியவை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

எலுமிச்சை சாறு பிழிந்து ஆவியை முகத்தில் பிடித்தால் முக‌ம் பொலிவு பெறும்.

அறிகுறிகள்:

  • முக‌ம் பொலிவில்லாமை.

தேவையான பொருட்கள்:

  1. எலுமிச்சை சாறு.

செய்முறை:

வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதன் ஆவியை முகத்தில் மூன்று நாட்கள் பிடித்து வர முகத்தில் அழுக்கு நீங்கி முக‌ம் பொலிவு பெறும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.5/5 (13 votes cast)

பச்சை நன்னாரி வேரைக் வெந்நீர் விட்டு அரைத்து கொடுக்க ப‌ல்லில் இர‌த்த‌ம் வ‌ருத‌ல் குறையும்.

அறிகுறிகள்:

  • ப‌ல்லில் இர‌த்த‌ம் வ‌ருத‌ல்.

தேவையான பொருட்கள்:

  1. பச்சை நன்னாரி வேர்.

செய்முறை:

பச்சை நன்னாரி வேரைக் வெந்நீர் விட்டு அரைத்து கொட்டைப்பாக் களவு எடுத்து  3 தடவை காலை, மதியம், மாலை என்று பல்லில் இரத்தம் நிற்கும் வரையில் கொடுக்க வேண்டும்.

VN:F [1.9.22_1171]
Rating: 4.7/5 (3 votes cast)

வெட்டிவேர்த்தூளை காய்ச்சி நல்லெண்ணைய் அதிமதுரம், தேசாவரம், கடுக்காய், கஸ்தூரி மஞ்சள் இவைகளைபொடித்து காய்ச்சி குளிக்க‌ காதுமந்தம் குறையும்.

அறிகுறிகள்:

  • காதுமந்தம்.

தேவையான பொருட்கள்:

  1. வெட்டிவேர்த்தூள்.
  2. நல்லெண்ணைய்.
  3. அதிமதுரம்.
  4. தேசாவரம்.
  5. கடுக்காய்.
  6. கஸ்தூரி மஞ்சள்.

செய்முறை:

வெட்டிவேர்த்தூள் 350 கிராம் எடுத்து  4 படி தண்ணீர் விட்டு அரைபடியாக் காய்ச்சி நல்லெண்ணைய் முக்கால் படி ,அதிமதுரம், தேசாவரம், கடுக்காய், கஸ்தூரி மஞ்சள்  இவைகளை பொடித்து காய்ச்சி குளித்து வந்தால் காதுமந்தம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (11 votes cast)

Page 1 of 3912345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers