17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: November 2011

Page 1 of 5412345...102030...Last »

தேவையான பொருள்கள்:

  1. வெண்டைக்காய் = அரை கிலோ
  2. பச்சை மிளகாய் = 5
  3. வெங்காயம் = 2
  4. தக்காளி[/wikipop] = கால் கிலோ
  5. இஞ்சி = சிறிது
  6. கடுகு = அரை ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
  8. கடலை பருப்பு = 2 ஸ்பூன்
  9. எண்ணெய் = 4 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • வெண்டைக்காயை அலம்பி நீரை வடித்து விட்டு காம்பு பகுதியையும், முனையையும் நறுக்கி விட்ட பின் வட்டமாக நறுக்கவும். இதனோடு சிறிது உப்பு கலந்து தட்டில் சாய்வாக வைக்கவும்.
  • சிறிது நேரத்தில் இதிலிருந்து தண்ணீர் வெளியேறும். இதை வடித்து எடுத்து விடவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி சேர்த்து கிளறவும்.
  • பின் இதில் வெண்டைக்காயை போட்டுப் புரட்டிக் கொள்ளவும்.

சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டாவோடு பரிமாறலாம்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (2 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. துவரம் பருப்பு = 200 கிராம்
  2. மஞ்சள் பொடி= சிறிதளவு
  3. பெருங்காயம் = சிறிதளவு
  4. முருங்கைக்கீரை  – 1 கட்டு
  5. வெங்காயம் = 2
  6. தக்காளி = 100 கிராம்
  7. மிளகாய் பொடி = 11/2 ஸ்பூன்
  8. புளி = எலுமிச்சை அளவு
  9. தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
  10. எண்ணெய் = 2 ஸ்பூன்
  11. கடுகு = 1 ஸ்பூன்
  12. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  13. மிளகாய் வற்றல் = 2
  14. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விட்டு மசித்துக் கொள்ளவும். முருங்கைக்கீரையை இளசாக எடுத்து ஆய்ந்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி நறுக்கவும். புளியை கரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவவும்.
  • குக்கரில் கரைத்த பருப்பை போட்டு கீரை, வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • நன்றாகக் கொதித்ததும் கரைத்த புளி, துருவிய தேங்காய் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்க்கவும். சாம்பார் நீர்க்க இருக்க கூடாது.

சுவையான முருங்கைக்கீரை சாம்பார் தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமா போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

  • முருங்கையில் வைட்டமின்  A, வைட்டமின் C, கால்சியம்,  பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம், தாது விருத்தி, வாதம் போன்றவவை குறையும்.
  • மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும்.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (2 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. புளி = எலுமிச்சை அளவு
  2. மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
  3. தனியா பொடி = 3 ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி = சிறிதளவு
  5. வெங்காயம் = 100 கிராம்
  6. தக்காளி = 100 கிராம்
  7. வெல்லம் = சிறிதளவு
  8. மிளகாய் வற்றல் = 2
  9. கடுகு = அரை ஸ்பூன்
  10. சீரகம் = அரை ஸ்பூன்
  11. எண்ணெய் = 4 ஸ்பூன்
  12. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • புளியை கரைத்து வடிகட்டி மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  • வெங்காயத்தையும், தக்காளியையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு அதனோடு முதலில் வெங்காயத்தையும் அடுத்து தக்காளியையும் வதக்கவும்.
  • வதக்கி குழம்பை எடுத்து ஊற்றி மூடி கொதிக்க விடவும். கொதித்து வரும் போது பொடி வாசனை அடங்கியதும் வெல்லத்தைப் பொடி செய்து சேர்த்து மேலும் சிறிது கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான வெங்காய குழம்பு தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, பொங்கல், உப்புமாவோடு பரிமாறலாம்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (2 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. பாகற்காய் = 150 கிராம்
  2. சின்ன வெங்காயம் = 50 கிராம்
  3. புளி = எலுமிச்சை அளவு
  4. மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
  5. தனியா பொடி = 3 ஸ்பூன்
  6. மஞ்சள் பொடி = சிறிதளவு
  7. வெல்லம் = சிறிய துண்டு
  8. எண்ணெய் = 4 ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் =  2 ஸ்பூன்
  10. கடுகு = அரை ஸ்பூன்
  11. கடலை பருப்பு = 2 ஸ்பூன்
  12. மிளகாய் வற்றல் = 2
  13. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • பாகற்காயை இரண்டிரண்டாக நறுக்கவும். வெங்காயம் உரித்துக் கொள்ளவும். புளியை கரைத்து வடிக்கட்டவும்.
  • சிறிது எண்ணெயில் பாகற்காய், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். இதை தனியாக வைக்கவும்.
  • புளித்தண்ணீரில் மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
  • பாதி கொதிக்கும் போது வதக்கிய பாகற்காய் சேர்த்து மேலும் சிறிது கொதிக்க விடவும். வெல்லம் சேர்த்து மீதி எண்ணெயில் கடுகு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி
  • மேலும் சிறிது கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். இறக்கி நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறவும்.

சுவையான பாகற்காய் வற்றல் குழம்பு தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, சப்பாத்தி, அடை போன்றவற்றோடு பரிமாறலாம்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

தேவையான பொருள்கள்:

  1. காளான் = 100 கிராம்
  2. சின்ன வெங்காயம் = 50 கிராம்
  3. தக்காளி = 100 கிராம்
  4. பச்சை மிளகாய் = 3
  5. பூண்டு = 1 முழுதாக
  6. இஞ்சி = காலங்குலம்
  7. புளி = சிறிது
  8. மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
  9. தனியா பொடி = 1 ஸ்பூன்
  10. மஞ்சள் பொடி = சிறிதளவு
  11. எலுமிச்சை = பாதி
  12. சீரகம் = அரை ஸ்பூன்
  13. எண்ணெய் = 2 ஸ்பூன்
  14. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • காளானை நறுக்கி கழுநீரில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து சிறிது மஞ்சள் பொடி கலந்து 2 முறை அலசி எடுத்து லேசாகப் பிழிந்து கொள்ளவும். அழுத்திப் பிழிந்தால் காளான் பிய்ந்து போய் விடும். அது போல அதிக நேரம் ஊற விட்டால் நீர் கோர்த்துக் கொள்ளும்.
  • இஞ்சியையும், பூண்டையும் அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடி பொடியாக நறுக்கவும்.
  • புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து உப்பு, மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்துக் கலந்து வைக்கவும்.
  • கரைத்த புளித் தண்ணீரை பொடிகளோடு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைக்கவும்.
  • அடுத்து எண்ணெயில் சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கி அடுத்தாக அரைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து காளானையும் சேர்த்து நன்றாக வதக்காமல் லேசாக வதக்கி கொதித்த புளி தண்ணீரையும் கொட்டி மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான சங்ககிரி காளான் குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

  • காளானில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நீர் மற்றும்  ஃபைபர் காணப்படுகிறது.
  • நீரிழிவு உடையவர்கள் காளானை எடுத்து கொள்வதால் தொற்று நோய்கள், வீக்கம் போன்றவை குறைகிறது.
  • காளானில் இரும்பு, தாமிரம், பொட்டாசியம், செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது.  நகங்கள், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
VN:F [1.9.22_1171]
Rating: 3.7/5 (3 votes cast)

தேவையான பொருள்கள்:

  1. அருநெல்லிக்காய் = முக்கால் கப்
  2. மிளகு = 1 ஸ்பூன்
  3. மிளகாய் வற்றல் = 2
  4. தனியா = 1 ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி = சிறிது
  6. சீரகம் = அரை ஸ்பூன்
  7. பெருங்காயம் = அரை ஸ்பூன்
  8. புளி = சிறிது
  9. கடுகு = அரை ஸ்பூன்
  10. எண்ணெய் = தேவையான அளவு
  11. உப்பு = தேவையான அளவு

செய்முறை:

  • அருநெல்லிக்காயை கழுவி விட்டு கொட்டையோடு மிக்ஸியில் போடவும். அதனோடு மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு, பெருங்காயம், புளி ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  • இதை 6 கப் தண்ணீரில் கரைத்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் பொடி கலக்கவும்.
  • எண்ணெய் காய விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

சுவையான நெல்லிக்காய் ரசம் தயார். இதை ரைஸோடும் பரிமாறலாம். சூப் போலவும் குடிக்கலாம். குடிப்பதற்கு என்றால் காரத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

மருத்துவ குணங்கள்:

  • நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ளக்ஸ், பாஸ்பரஸ், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும்.
  • பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும்.
  • இரத்தத்தை தூய்மையாக்கும், மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

Page 1 of 5412345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers