17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: August 2011

Page 1 of 9312345...102030...Last »

வெயில் காலங்களில் கிடைத்திடும் ஒப்பற்ற மருத்துவக் குணமும்,இனிப்பும்,சுவையும் கொண்ட எல்லோரும் விரும்பும் பழம்  மாதுளை.மேல் தோல் கடினமாக இருக்கும்.உள் தோல் வெண்மையாக இருக்கும்.முத்துக்களாக உள்ள பழம்.சிவப்பாக இருக்கும்.பழங்களின் இராணி என்றும் போற்றப்படுகிறது.இரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும் இரும்புத் தாதும்,சர்க்கரையும் மிகுந்த பழம்.

மாதுளை பழத்தில் உள்ள சத்துக்கள்:

  1. நீர்=78%
  2. மாவுப்பொருள்=15%
  3. புரதம்=1.7%
  4. கொழுப்பு=0.1%
  5. கால்சியம்=0.01%
  6. பாஸ்பரஸ்=0.07%
  7. இரும்புத்தாது=0.03 யூனிட்
  8. வைட்டமின் C=16 யூனிட்
  9. வைட்டமின் B2=10 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் மாதுளை பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:

  • மாதுளையில் எளிதில் ஜீரணிக்கும் சத்தும்,சர்க்கரையும் மிகுந்து உள்ளதால் பிணியாளர்கள்,குழந்தைகள் நல்ல பலன் பெறுவர்.வயிற்றுப் புண்,வயிற்று வலி,வயிற்று உளைச்சல்,ஜீரணக் கோளாறு,பசியின்மை போன்றவற்றை நீக்கும் உணவுச்சாறு.
  • மனதிற்கும்,உடலுக்கும் பூரிப்பும்,மகிழ்ச்சியும்,புத்துணர்வும் தரும் சாறு.
  • குளிர்ச்சியான பானம்,உடல் சூடு,மூலம்,கருப்பை சார்ந்த பிணிகள் நீங்கும்.இதயம் வலிமை அடையும்.
  • ஹீமோகுளோபினைக் கூட்டும் உயர்ந்த சாறு.
  • வயிறு உப்புசம்,காய்ச்சல்,மலேரியா,அம்மை கண்ட காலத்தில் இது நல்ல மருந்தாக உள்ளது.
VN:F [1.9.22_1171]
Rating: 4.7/5 (25 votes cast)

பழங்களின் அண்ணன் அன்னாசிப்பழம்.சிறுநீரகங்களின் சிறந்த நண்பன்.இது முரட்டு தோல் உள்ள மஞ்சள் நிறப்பழம்.சாறு மிகுந்து இனிப்புடன் காணப்படும்.சர்க்கரைச் சத்து மிகுந்தது.

அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்:

  1. நீர்=86%
  2. மாவுப்பொருள்=12%
  3. புரதம்=0.6%
  4. கொழுப்பு=0.1%
  5. கால்சியம்=0.12%
  6. பாஸ்பரஸ்=0.01%
  7. இரும்புத்தாது=0.9 யூனிட்
  8. வைட்டமின் C=60 யூனிட்
  9. வைட்டமின் A=60 யூனிட்
  10. வைட்டமின் B2=120 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் அன்னாசி பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:

  • உடனடி சக்தி,தெம்பு,புத்துணர்ச்சி தருவது அன்னாசிப் பழச்சாறு.குரல் வளத்தை மேம்படுத்தும்.தொண்டை வலி நீக்கும்.சளி,இருமல்,மூச்சுப் பிணிகள் விலகும்.
  • ஜீரணம் மேம்படும்.மலச்சிக்கல் விலகும்.இதில் மிகுந்துள்ள குளோரினால் நச்சுப்பொருட்கள் விரைவில் வெளியேறி சிறுநீரகம் பாதுகாப்பும்,ஓய்வும் பெறுகின்றது.
  • காய்ச்சல்,மஞ்சள்காமாலை போன்றவற்றை குறைக்கும் உன்னதமான பழச்சாறு மிக்கது அன்னாசி.
VN:F [1.9.22_1171]
Rating: 3.5/5 (12 votes cast)

கோவை இலைப் பொடியை நீரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமல் குறையும்.

அறிகுறிகள்:

  • உடல் சூடு.

தேவையான பொருள்கள்:

  1. கோவை இலை.

செய்முறை:
கோவை இலைப் பொடியை நீரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமல் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

சங்கன்  இலைப் பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

அறிகுறிகள்:

  • பித்தம்.

தேவையான பொருள்கள்:

  1. சங்கன் இலை.

செய்முறை:
சங்கன்  இலைப் பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

சத்திச்சாரணை  இலைகளை,அரைக்கீரையுடன்  சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.

அறிகுறிகள்:

  • சளி.
  • கோழை.

தேவையான பொருள்கள்:

  1. சத்திச்சாரணை  இலை.
  2. அரைக்கீரை.

செய்முறை:
சத்திச்சாரணை  இலைகளை,அரைக்கீரையுடன்  சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

சத்திச்சாரணை  இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும்.

அறிகுறிகள்:

  • சிறுநீர் அடைப்பு.

தேவையான பொருள்கள்:

  1. சத்திச்சாரணை  இலை.
  2. தேன்.

செய்முறை:
சத்திச்சாரணை  இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும்.

VN:F [1.9.22_1171]
Rating: 5.0/5 (1 vote cast)

Page 1 of 9312345...102030...Last »

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers