17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

Monthly Archives: December 2010

Page 1 of 212

ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச் சளி குணமாகும்.

அறிகுறிகள்:

  1. தும்மல்.
  2. அதிக இருமல்.
  3. மூக்கில் சளி வடிதல்.
  4. மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. ஏலக்காய் பொடி.
  2. நெய்.
செய்முறை:
ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.3/5 (6 votes cast)

பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர, தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும் விலகும்.
அறிகுறிகள்:
  1. தொண்டையில் கரகரப்பு.
  2. தொண்டையில் எரிச்சல்.
  3. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. பூவரச மர வேர்.
  2. பூவரச மரபட்டை.
செய்முறை:
ஒரு கையளவு பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் வாய் கொப்பளிக்கவ்வும்.
VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (6 votes cast)

சோம்பு, கொத்தமல்லி, சுக்கு, பனைவெல்லம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வர மார்பு எரிச்சல் குணமாகும்.
அறிகுறிகள்:
  1. வறட்டு இருமல்.
  2. மார்பில் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. சோம்பு.
  2. கொத்தமல்லி.
  3. சுக்கு.
  4. பனைவெல்லம்.

செய்முறை:

இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி, இரண்டு துண்டு சுக்கு, இரண்டு தேக்கரண்டி சோம்பு மற்றும் சிறிதளவு பனை வெல்லம் எடுத்து நன்கு கொதிக்க வைத்து அந்த கஷாயத்தை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பருகவும்

VN:F [1.9.22_1171]
Rating: 4.8/5 (4 votes cast)

தினமும் காலையில் தேன் கலந்த வெந்நீர் குடித்து வர அதிக சதை குறைந்து உடல் மெலியும்.

அறிகுறிகள்:

  1. அதிக உடல் எடை.

தேவையான பொருட்கள்:

  1. தேன்.

செய்முறை:

இரண்டு தேக்கரண்டி தேனை ஒரு குவளை வெந்நீருடன் கலந்து தினமும் காலை உணவு அருந்துவதுற்கு முன் பருகவும்.
VN:F [1.9.22_1171]
Rating: 3.9/5 (61 votes cast)

கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும்.
அறிகுறிகள்:
  1. முடி வளர்ச்சி குறைவாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. கேரட்.
  2. எலுமிச்சம் பழம்.
  3. தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

தேங்காய் எண்ணெயில் கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தலையில் தேய்க்கவும்.

VN:F [1.9.22_1171]
Rating: 3.6/5 (62 votes cast)