17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest

தேவையான பொருள்கள்:
  1. சுக்கு = 1 துண்டு
  2. வெந்தயம் = 1ஸ்பூன்
  3. மிளகு = 2 ஸ்பூன்
  4. புளி = சிறிய உருண்டை
  5. சின்ன வெங்காயம் = சிறிதளவு
  6. தக்காளி = 1
  7. கடுகு = அரை ஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் = சிறிதளவு
  10. மிளகாய் தூள் = அரை ஸ்பூன்
  11. கறிவேப்பிலை = சிறிதளவு
  12. எண்ணெய் = தேவையான அளவு
  13. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிய துண்டாக வெட்டி கொள்ளவும்.
  • சுக்கு, வெந்தயம், மிளகை எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்து ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கி வதங்கியதும்  புளிக்கரைசலை ஊற்றி உப்பு , மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் போது பொடி செய்து வைத்த சுக்கு கலவையை சேர்த்து கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான, ஆரோக்கியமான சுக்கு குழம்பு தயார். இதை அனைத்து விதமான சாதத்திற்கும் பரிமாறலாம்.

சுக்கின் மருத்துவ குணங்கள்

  • சுக்கில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், செம்பு, மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், குரோமியம், கரோட்டீன், தையாமின், நியாசின் மற்றும் வைட்டமின் “சி” காணப்படுகிறது.
  • சுக்கு ஜலதோஷம், மலச்சிக்கல் வருவதை தடுக்கிறது. தலைவலியை குறைக்கும். வாய்வு கோளாறுகளை நீக்குகிறது.
  • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயிற்று வலியை குறைக்கிறது. செரித்தலுக்கு உதவுகிறது.
  • தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கிறது. உடல் உறுப்புகளை சுத்தம் செய்து கழிவுகளை அகற்றுகிறது. பசியை தூண்டுகிறது.
VN:F [1.9.22_1171]
Rating: 4.2/5 (5 votes cast)
சுக்கு குழம்பு, 4.2 out of 5 based on 5 ratings

Report us..

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers