17,259 questions relieved 34,890 peoples. What about you ? Come and ask granny and get relieved.

Categories

Provide details about your health conditions.We will take care of the rest




Natharsha

நான் நத்தர்சா 27 வயது .நான் இரவு பல் தைத்து உறங்க செல்கிரேன். காலை எழுந்தவுடன் குமட்டல், வாய் துர்நாற்றம்,பித்த வாந்தி அதிகம் உள்ளது. பித்த வாந்தி எடுத்தாள் அன்று உடலில் BP அதிகம் ஏற்பாடுகின்றது.

Posted On : 2011-09-12 11:13:42, Views 6683, 5 Answers


Dr.Sankar
இஞ்சியை நறுக்கி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு வெயிலில் ஊற வைத்த பிறகு அதனுடன் வெயிலில் காய வைத்த தனியா மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை தினமும் சாப்பிடும் முன் இரு வேளை சாப்பிட்டால் பித்தம் குறையும். பித்தத்தால் ஏற்படும் குமட்டல், தலைசுற்றுதல் மற்றும் வாந்தி குறையும்.

கையாந்தங்கரை இலையை பிழிந்து சாறு எடுத்து,சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் BPயை சோதனை செய்து அதன் அளவை அறிந்து அதற்குரிய மருந்துகளை தவறாமல் எடுப்பது மிகவும் சிறந்தது.

Posted on : 2011-09-12 11:30:26


pooja
இஞ்சி சாறு, வெங்காய சாறு,இவற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.
Posted on : 2011-09-12 12:08:40


vishal
கைப்பிடியளவு வில்வ இலையை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி அருந்தி வந்தால் பித்தம் மற்றும் பித்த வாந்தி குறையும்.
Posted on : 2011-09-12 12:14:54


mugesh
அவரைக்காயை அதிகமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் பித்தம் குறையும்.
Posted on : 2011-09-12 12:18:44


harini
எலும்மிச்சம் பழச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பித்தம் குறையும்.பித்தத்தால் வரும் வாந்தி குறையும்.
Posted on : 2011-09-12 12:26:03
Post Your Answer


VN:F [1.9.22_1171]
Rating: 4.0/5 (1 vote cast)
Answer, 3.5 out of 5 based on 67 ratings

Report us

If you find any copyrighted media contents of other websites used in this website,
Click here to report

Answers